பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

269

"மன்னிப்பு மட்டுமல்ல தோழரே! உங்கள் செய்தி எனக்குப் போன உடல் நலத்தில் பாதி தந்துவிட்டது. உலாவை நான் என் தோல்வியால்தான் விட்டேன். அத்தோல்விதான் உடல் நலத்தைக் கெடுத்தது. ஆனால் உண்மையறிந்தேன். இப்போது மனமாரவே உலாவை விட்டுவிடுகிறேன். உங்கள் திருந்திய நல்லுரைக்காகவும் என் அத்தை, மருமான், நண்பர் புதுவாழ்வுக்காகவும் நான் இனி வாழ்வேன், இது உறுதி.

66

“ஆனால் எனக்கு இன்னும் சில ஐயங்கள் போகவில்லை. எல்லாம் நாடகமென்றால், நூலகம் எப்படி போயிற்று? இளவரசியின் வாக்குறுதிகள் என்னவாயிற்று? ஒளிக்காமல் இனி இவற்றைக் கூறலாம். என் உடலுக்கு இவை அதிர்ச்சி தரமாட்டா. நேர்மாறாகத் தேற்றிவிடும் முழு உண்மையை அறியக்கூடும்” என்றான்.

நான்

அன்பர்கள், உறவினர் உள்ளங்கள் குளிர்ந்தன. முகங்கள்

தெளிந்தன.

“அண்ணலே! எங்கள் வயிற்றில் பால் வார்த்தீர்கள். இனி னி முழு உண்மையைக் கூறச் சிறிதும் தயங்கமாட்டேன். உங்கள் நூலகம் எங்கும் போகவில்லை. நூல்கள் கோவிலில் ஓர் அறையில் இருக்கின்றன. அறையும் எங்கும் போகவில்லை. நாலு பக்கமும் ஒரே இரவில் அடைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஏமாற்றுக்கும் நீங்கள் உங்கள் உண்மையுள்ள நண்பர் சிலரைத்தான் மன்னிக்க வேண்டும். ஏனென்றால் உலாவாழ்வை எப்படியும் தடுக்கும் எண்ணத்துடன் கோமாறனும் நன்னயப்பட்டரும், உங்கள் அத்தையும் மருமகளுந்தான் இதைச் செய்தனர்.

பாரத வீரன் பெருமூச்சு விட்டான். அவர்கள் அவன் உடல் நிலைக்கு அஞ்சினர். ஆனால் அவன் முகம் மலர்ந்தது.

“என் வீர வாழ்வு போகட்டும். அந்நூல்களும் நூலகமும் பிழைத்தது பற்றி மகிழ்கிறேன். அவற்றின் கற்பனை இனி என்னை ஒன்றும் செய்யாது” என்றான்.

மணிப்புலவன் மீண்டும் தொடர்ந்தான்.

"அருங்குணச் செல்வரே! இளவரசி வகையில் ஏமாற்று

இன்னும் பெரிது.

ளவரசி என்று யாரும் கிடையாது.