270 ||__
அப்பாத்துரையம் - 39
ளவரசியாக எங்கள் தூண்டுதலால் நடித்தது மாரியின் மகன் மருதுவே. அவன் உங்களுடன் முன்பு பெண் வேடமிட்டு நடித்தவன் தான். தாங்கள் அவனுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அத்தனையும் இதனால் முறிக்கப்பட வேண்டியவையே. இதை அவனே காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு வேண்டிக் கொள்வான். அத்துடன் அதனால் உங்கள் உள்ளத்தில் எவ்வித துன்பத்துக்கும் இடம் ஏற்பட்டு விடக்கூடாது” என்றான்.
பாரத வீரன் மீண்டும் பெருமூச்சு விட்டான்.
66
அன்பனே! இங்கும் ங்கும் உண்மை அனுகூலமானதே! இளவரசிக்குக் கட்டுப்பட்டே நான் என் உள்ளத்தின் இயற்கை உணர்ச்சிகளைக் கொன்றே அடக்கி வந்தேன். இந்த நாடக முறிவால் என் புதுவாழ்வு உடனே தொடங்கி விட்டது” என்றான்.
பாரத வீரன் வள்ளி பற்றித்தான் குறிப்பிடுகிறான் என்பது மணிப்புலவனுக்குத் தெரிந்தது. "செங்கோடனும் அவன் குடும்பத்தவரும் உங்களை வந்து பார்க்க விரும்பினர், அண்ணலே! இந்த உண்மைகளைக் கூறும் வரை அவர்களை காக்க வைத்திருக்கிறேன். அத்துடன் அவர்கள் வருமுன், மருதுவை நீங்கள் காண்பது நல்லது என்று எண்ணுகிறேன்” என்று அவன் கூறினான்.
பாரத வீரன் ஆர்வத்துடன் இணங்கினான். மருது வந்து பாரத வீரனைக் கட்டிக் கொண்டு அழுதான். பாரத வீரன்
அவனை ஆணுருவிலேயே ஆவலுடன் அணைத்துக்
கொண்டான். “நீ பெண்ணாக நடித்த என்னைத் திறமையாக ஏமாற்றினாய். இனி ஆணாக நடித்து ஒரு பெண்ணை ஏமாற்ற முடியுமானால்..." என்று தயங்கினான்.
“உங்கள் விருப்பம் எதுவானாலும் அதை நிறைவேற்றத் தடையில்லை. அது வேம்பானாலும் வேம்பானாலும் உட்கொள்வேன்" என்றான்.
பாரத வீரன் செங்காவியை ஒரு கையில் இழுத்து மடிமீது சாத்தினான். “இந்தப் பிள்ளை கவலை ஒன்றுதான் எனக்குக் குடும்பத்தில் இருக்கிறது. இது உனக்கு வேம்பாயிருக்குமோ, கரும்பாயிருக்குமோ தெரியாது. அவள் விரும்பி நீயும் விரும்பினால், அவளை நீ ஏமாற்றலாம்” என்றான்.