பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மருதூர் மாணிக்கம்

"செங்காவி

(271

எனக்குப் புதியவளல்ல. அவளுக்குப்

பிடித்திருந்தால், மிகவும் மகிழ்ச்சியே!" என்றான் மருது.

மணிப்புலவன் இப்போது தலையிட்டான்.

மருது இனி இந்த வீட்டு வாசலில் காத்திருக்கட்டும். செங்கோடனே உள்ளே வரட்டும்" என்றான்.

செங்கோடனுக்குப் பாரத வீரன் மனமார்ந்த வணக்கம்

தெரிவித்தான்.

“உங்களைக் குருவாக்கி எத்தனையோ தொல்லை தந்தேன். ஆனால் நீங்கள் என்னை மருமகனாக்கப் பாடுபட்டீர்கள். மருமகனாகவே உங்களுக்கு இப்போது தெரிவிக்கிறேன்” என்றான்.

வணக்கம்

வள்ளி பின்னால் நின்றாள். பாரத வீரன் தன்னையறியாமல் அவளைத் தன் கட்டிலண்டை இழுத்தான். அத்தையை எழுந்து நோக்கித் திரும்பினான். “அத்தை, நம் செங்காவியை வெளியே துரத்தப் போகிறோமல்லவா? அந்த இடத்தில் இனி இவள் இருப்பாள்?” என்றான்.

செங்காவியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. அவள் வள்ளியை ஆவலுடன் கட்டிக் கொண்டாள்.

பாரத வீரன் வாழ்வு புது வாழ்வாயிற்று. ஆனால் அவன் நடிப்பில் காட்டிய வீரம், புகழார்வம், துணிச்சல் அவனை விட்டு நீங்கவே இல்லை. அவன் பழம் புகழ் கேட்டவர்கள் அடங்கிய புன்முறுவல் செய்ததுண்டு. புதுப்புகழ் அதை மலர்ந்த புன் முறுவலாக்கிற்று.

மணிப்புலவன் மீண்டும் மணிவண்ணனானான். பட்டி மந்திரியின் மூத்த பெண்ணை அவன் மணந்து இனிது வாழ்ந்தான். ஆனால் அவன் காவியத்தை விடவில்லை. மாரியப்பன் புதுவாழ்வையே அவன் பாரத வீரன் பொன்னுலக வாழ்வாகத் தீட்டி முடித்தான்.

பாரத வீரன் மீண்டும் மாரியப்பனானான். பாரத வீரன் வாழ்வு அவன் வாழ்வின் ஒரு சீரிய கனவுப்படலமாக ஒளி வீசிற்று. முற்றும்