பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழி, இனம், நாடு

மொழி, இனம், நாடு-உயர் முன்னேற்றம் தேடு! பெரும் பழியறியாத் தமிழர் புகழ் பண்ணமைத்துப் பாடு !

அழிவு செய்யும் தீமைகளை ஆழப்புதைப் போமே! - நன்மை சூழவிதைப் போமே!

இழிவு கூறும் சாதிமத

மொழி

இன்னல் அழிப்போமே! - சூழும்

இடர்கள் ஒழிப்போமே!

மொழி

பொதுமை நலம் பூத்திட - ஓர்

புரட்சி காணுவோமே!- பெரும்

புதுமை பூணுவோமே!

புதுமை வளம் அறிவு பெருக

போக்கை மாற்றுவோமே!- சம

நோக்கை ஏற்றுவோமே!

(மொழி)

நலிவு சேர்க்கும் மடமைகளை

நடுவில் வைத்துக் கொளுத்துவோம் -நல்

லறிவை நாளும் வழுத்துவோம்!

வலிவுதேக்கும் தாய்மைத்தமிழை வாழ வைத்துப் போற்றுவோம்!-நம் வாழ்வில் ஒளியை ஏற்றுவோம்!

உதவு

(மொழி)

- பாவலரேறு பெருஞ்சித்திரனார் கனிச்சாறு-2

தமிழ்மண் பதிப்பகம்

2. சிங்காரவேலர் தெரு, தியாகராயர் நகர்.

6160T600601 - 600 017.

தொலைபேசி : 044-24339030

செல்பேசி

9444410654