16
அப்பாத்துரையம் - 39
உதவுகின்றன. பொன் வெள்ளிக் கலங்களும் தட்டங்களும் செல்வர்கள் வீடுகளிலும் அரண்மனைகளிலும், செல்வ வளமிக்க கோயில்களிலும் மடங்களிலும் உண்ணவும் பருகவும் நற்பொருள்கள் காணிக்கைகள் வைக்கவும் பயன்படுகின்றன. இன்ப வாழ்க்கைக்கான பல பொருள்களும், செல்வச் செருக்கைக்காட்டும் பொருள்களும், பொன்னாலேயே செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் பித்தளை முதலிய இழிந்த திண் பொருள்களை வழங்குமிடத்திலும், பொன்னை வழங்குவர். பகட்டான மாபெரும் செல்வர், அரசர் பேரரசர்களின் மணிமுடியும். செங்கோலும், இருக்கைகளும் பொன்னாலானவைகளே.
பொன்னுக்கு இத்தனை சிறப்பு இருந்தும், அது. இரும்பிளைப்போல் ஏழை மக்கள் வாழ்விலும் செல்வர் வாழ்விலும் ஒப்ப வழங்கும் எளிமையற்றது. நேரிடையாகத் தனிப்பட்ட மக்கள் ாழ்விலும் சரி, உலகத் தொழில் முறைகளிலும் சரி, இரும்பு முதலிய பொருள்களைப்போல் அது பெரும்படியான பயனுடையதும் அன்று. அதன் பயனெல்லாம் இன்பவாழ்விலும் வாழ்க்கையின் உயர்தர நிறைவுகளிலேயுந்தான்.
இக்காலத்தில், பொன்னின் உயர்வான விலையின்றியே,
பொன் தோற்றம் உண்டுபண்ணப் பொற்பூச்சினை அடிக்கடி வழங்குகின்றார்கள். பூச்சில் பலவகையுண்டு. செம்பு கலந்த பொன் உண்மையில் பொன்னினும் பகட்டான தோற்றமுடையது. அதனைப் பொன்மீது பூசிப் பொன்னைக்கூடப் பொலிவு செய்வதுமுண்டு. அரசநீரம் போன்ற நீரகங்களிற் கரைத்த பொன்கரைசலும் பூச்சுக்குப் பயன்படும். இவையேயன்றி மிக மெல்லிதாக அடித்த பொன்தாளும் பொன்பூசப் பயன்படக் கூடும்.திண்ணம் வாய்ந்த தாள்களுக்கிடையில் வைத்துப் பொன்சுத்தியால் அடிக்கப்பட்டோ பொறிகளின் உருளை களிடையே அரைக்கப்பட்டோஉள்ளித்தாள்போல் மெல்லி தாக்கப்படுகின்றது. அதன்பின் அது தூரிகை பட்டதும் பொடிப் பொடியாய் அதில் ஒட்டிக்கொண்டு பிற பொருள்களின் மேற் பூச உதவுகின்றது. ஓர் இராத்தல் (பவுண்டு) எடைப் பொன்னிலிருந்து மூன்றரை அங்குலச் சதுர அளவுள்ள இத்தகைய தாள்கள் 75 வரை அடிக்கலாம். பொதுவாகப் பொன் எடைமிக்க பொருளான போதிலும், இம் மெல்லிய உருவில்