பொன்னின் தேட்டம்
17
அஃது ஊதினால் காற்றில் தங்கத் தூசியாய்ப் பரந்து செல்லுந் தன்மையுடையது.
பான்னெழுத்துக்கள் அச்சிடுவதற்கும், புத்தகங்களின் விளிம்புகளுக்குப் பொன்பூச்சுப் பூசுவதற்குங்கூட இப்பொன் தாள்கள் பயன்படுகின்றன. இவ்விரண்டு வகைகளிலும் அணி செய்யப்பட்டு மேனாட்டின் விவிலிய நூலைப்போலவே இன்று தமிழ் நாட்டின் திருக்குறள், தேவாரம், திருவாசகம் முதலிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொன் தாளின் இன்னொரு பயன் மருந்தாகவும் நல்லுணவு முறை (Tonic) யாகவும் வழங்குவதேயாம். தமிழர் மருத்துவ நெறியாகிய சித்தர் நெறியில் தங்கம் நீறாக்கப்பெற்று மருந்துகளிற் சேர்க்கப்பெறுகின்றது. உடலுக்கு நலனையும் நீண்ட வாழ்நாளையும் பொலிவையும் இது தரும் என நூல்கள் கூறுகின்றன. தாய்மார் இன்றும் சிறு குழந்தைகளுக்குச் சிறு அளவேனும் பொன் உரைத்துக் கொடுக்கின்றனர்.
மேற்கூறிய பயன்கள் எல்லாம் மக்கள் வாழ்வில் இன்றியமையாப் பயன்கள் அல்ல; அல்ல; மக்கள் வாழ்வை அணிசெய்பவை மட்டுமேயாகும். ஆனால், இன்றைய உலகில் பொன் தலைசிறந்த பொருளாய் இயங்குவதும் உலக முன்னேற்றத்துடன் இன்றியமையாது இரண்டறக் கலந்து விளங்குவதும் இம் மேலீடான பயன்களாலல்ல. பொருளின் மதிப்பீடாகவும், அதன் அறிகுறியாகவும், வாணிபத்தின் உயிர் நிலையான காசாகவும் வழங்குவதே அதற்கு உண்மையில் (முதல் பிரிவில் யாம் கூறிய) உயர் நிலையைக் கொடுத்தது.