பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

அப்பாத்துரையம் - 39

கிடைத்தோ பொன்னைப்போல் பயன்படுத்துந் தகுதி அற்று விடுகின்றன.

ம்

வெள்ளியும் பிற இழிந்த திண்பொருள்களும் மலிவினாலும் வளம்படக் கிடைப்பதனாலும் மதிப்பிழந்தன. மின்பொன், திண்பொன், ஒண்பொன் முதலியவை மக்கள் வழங்கு அளவிற்குக்கூடக் கிடைக்கப்பெறாமல் பொன்னைவிடப் பேரரும்பொருள்களாயின. எனவே மிக அருகலுமாகாமல் மிக மலிவுமாகாமல் ‘பொன் நிலை'யில் நின்ற இத் திண்பொருள் ஒப்புயர்வற்ற தனிவாய்ப்புடைய இடையீட்டுப் பொருளாகவும் மதிப்பளவையாகவும் வழங்கலாயிற்று.

மேலும் நூறு வெள்ளிக்காசு கொண்டுசெல்பவன் அதன் விலைக்கு நெல்லோ இரும்போ எதுவாங்கினாலும் அதனைத் தூக்கிச் சுமத்தல் இயலாது. தங்கமானால் கையடக்கமாயிருக்கும். மேலும் பிற பொருள்கள் கெடும்; தங்கம் கெடுவதில்லை. மக்களுக்கு வாழ்க்கையில் நேரிடைப் பயனற்றதாயிருப்பதுகூட இவ்வகையில் ஒரு சிறப்புத்தான். நெல்லையுண்பது போல பொன்னை உண்ணமுடியுமானால் அது செல்வம் என்ற முறையில் அழிவுற்று நிலவரப் பண்டமாற்றாக உதவாதன்றோ? உண்மையான செல்வம் உணவாகவும் உடையாகவும் வழங்கும் போதெல்லாம், அவற்றின் மதிப்பீடாகிய பொன், வழங்குபவரிடமிருந்து ஈபவரிடம் சென்று செல்வ நிலைக்கு என்றும் அழியாக் குறியீடாக நிற்கின்றது.

காசுக்கு மாற்றாகத் தாள்கள் வழங்கும்போதும், அத்தாளிற்கு மதிப்பிருப்பது, அதிற்குறிப்பிட்ட எடையுள்ள தங்கம் அரசியலாரிடம் இருப்பதனாலேயே என்பதை மறந்துவிடக்கூடாது. எனவே வாழ்க்கைக்கு நேரிடையாகப் பயன்படும் உணவு உடைகட்கு அடுத்தபடி வாணிப வாழ்வுக் கான செல்வம் பொன்னே என்று காணலாம். உண்மையில் மக்கள் வாழ்வுக்கு உணவும் உடையும் எப்படியோ அப்படியே வாணிப வாழ்வுக்குப் பொன்னும் இன்றியமையாப் பொருள் ஆகிவிட்டது என்று கூறலாம்.

இங்கிலாந்தில் 17-ஆம் நூற்றாண்டு முதல் வெள்ளியும் பொன்னும். மதிப்பளவைகளாக அரசியலாரால் ஏற்கப்