பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

29

குன்றுகளையும் பாறைகளையும் ஆராயத் தொடங்கினான்.எடை மிகுந்த கற்கள் உள்ள இடங்களிலும் ஆற்றின் நீரோட்டத்தால் ஆழமாகப் பிளந்து செல்லப்பட்ட இடங்களிலும் ஆராய்ந்து அவன் ஆற்றின் பொன்வளமெல்லாம் உண்மையில் அவ்வாற்றின் பிறப்பிடமாகிய குன்றுகளிலும் பாறைகளிலும் உள்ளவையே என்று கண்டான். ஆற்றுவெள்ளம் இப்பாறைகளை உடைத்து அடித்துக் கொண்டு வந்தவைகளே பொற்கலவைக் கற்களும் மணிக்கற்களும் ஆயின என்றும், அவை மீண்டும் அடித்தடித்துப் பொடியாக்கியவையே பொன் மணல் என்றும் அவன் தன் பகுத்தறிவால் உய்த்துணரலானான். ஆற்றின் விழுவாயிலிருந்து பொன் படிப்படியாக மிகுவதும், பொன் மணல் படிப்படியாகப் பருமைமிகுந்து கூழாங்கற்களாகவும் பாறைகளாகவும் காணப்படுவதும் இதே கோட்பாட்டை வலியுறுத்தின.கடல்நீரில் இன்று கலந்திருக்கும் பொன்கூடப் பல நூறாயிர ஆண்டுகளாக ஆறுகளனைத்தும் அடித்துக் கரைத்துக் கொண்டுவந்த பொன்னேயாகும் என்று கூறல் மிகையாகாது.

சின்னஞ் சிறுமலைகளே பொன்னின் பிறப்பிடமானால் மலைகளின் தந்தையாக உருவகப்படுத்தப்பட்ட மேருமலை பொன் மயமாகவே இருக்கும் என்று எண்ணுதல் இயற்கைதானே. ஆகவேதான் மெய்ம்மையும் புதுமையும் தோன்றப் புனைந்து கூறும் அக்காலக் கவிஞர்கள் மேருமலை பொன் மயமானது எனக் கூறினர்.பலரும் பொன்னைத் தேடியலைந்தும் ஒரு சிலர்க்கே அது கிட்டியது. கண்டு மக்கள் மயங்கி அவர்கள் தம் அறிவாற்றலின் துணையால் இயற்கையில் மறைவாகக் கிடந்த பொன்னை தேடியெடுத்தவர்கள் என்றெண்ணாது அவர்களை மாயக்காரர் என்றும், மந்திரக்காரர் என்றும், மணிமந்திரக்காரர் என்றும் எண்ணினர். கண் கூடாக அவர்கள் மண்ணையும் கல்லையும் பொன்னாக்கியதையும் பொன்கலந்த பிற திண்பொருள்களிடத் திலிருந்தும் பாதரசத்திலிருந்தும் பொன்னைப் பிரித்தெடுப்பதையும் கண்டுங்கூட உண்மையை உய்த்தறிய முடியாமல் அவர்கள் மண்ணையும் கல்லையும் இரும்பையும் பொன்னாக்கினர் என்று நினைத்தனர். அதைப் பித்தரை முழுப்பித்தராக்கச் சிந்தாமணிக் கதை வேறு புனைந்துரைக்கப் பட்டது. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் இம்மணியைப் பெற்றே அக்காலச் சித்தர் எளிதில் பொன் பெற்றனர் என்று தமிழ்நாட்டுப் பொதுமக்கள்