ட
30
||--
அப்பாத்துரையம் - 39
நம்பினர். மேனாடுகளிலும் அந்நாட்களில் இந்நம்பிக்கை பரந்திருந்தது. கவிதையின் உள்ளம் காணும் திறனுடையவர்க்கு இச் சிந்தாமணிக் கதை வெறுங் கதையன்று. மனிதரது பகுத்தறிவும் உய்த்துணர்வுமே இச் சிந்தாமணி என்றறிவர். அங்ஙனம் அறியாதவர் உள்ளத்தில் எல்லாம் பேராவற் பேயன் கூத்தாடுகின்றான் என்பதில் ஐயமில்லை. சித்தர் நூல்களையுங் கூடத் தன்னிலை தவறாது படிப்பவர்க்கு அவற்றின் ஆசிரியர் மெய்யறிவையே சிந்தாமணியென்றும், சஞ்சீவி என்றும். காயகற்பமென்றும், முப்பூ என்றும்,சிவம் என்றும் கூறி மக்களைப் 'பொன்னிலை' மயக்கத்திற் காளாக்கி நகையாடினர் என்று காணலாம்.
து
கடுஞ்சொற்களின் ஆழத்திலும் புதைந்து கிடக்கும் கவிஞனது மெய்ம்மையைப் போலப் பாறையிற் புதைந்து கிடக்கும் தங்கத்தின் தடத்தை அறிந்த பொன் தேட்டாளன் பகலிரவென்றும் பசியென்றும் விடாயென்றும் பாராது வெட்டியும் கல்லியும் தகர்த்தும் பொடித்தும் அதனைப் பின்பற்றி அகழ்ந்து சுரங்கங்களுக்கு வழிதேடினான். ஆற்றின் படுக்கையில் கிடைத்த பொன்மண்ணைத் தொடர்ந்து சில சமயம் மருத நிலத்திலும், பாறைகளிற் கிடைத்த பொன்னின் கவட்டைப் பின்பற்றிக் குறிஞ்சி நிலத்திலும் பொன் சுரங்கங்கள் தோண்டப் பெற்றன. மருத நிலத்துப்பொன் ஆற்றில் கரைந்து வந்த பொன்னே யாதலால் அதனைவிடப் பொன்னின் பிறப்பிடமாகிய குறிஞ்சி நிலத்துப் பொன்னே அளவிலும் அழியா நிலையிலும் மிக்கது என்று கூறவேண்டுவதில்லை.
நிலத்தின் ஆழத்தை அகழ்ந்தும் மலைகளின் உட்புறம் குடைந்தும் இன்று பல சுரங்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஐரோப்பாக் கண்டத்தில் உருசியாவிலும் ஆஸ்திரியாவிலும் அமெரிக்காவில் கானடாவிலுள்ள ஷோர் ஏரிக்கரையிலும் மருத நிலப் பாங்கரிலேயே பொற்சுரங்கங்கள் உள்ளன. தென் தகோட்டா (S.Dakota) வில் கருங்குன்றுகளிலுள்ள பச்சைப் பாறைகளிலும் வட அமெரிக்காவின் அராக்கி மலைத் தொடர்களின் கந்தகக் கலவைக் கற்களிலும் குறிஞ்சி நிலத்தில் சுரங்கங்கள் வெட்டப்பட்டுள்ளன. மைசூர் நாட்டுக் கோலாற்றுத் தங்க வயலும், கலிபோர்னியாவின் 'தாய்ப் பாறையும்' தென் அமெரிக்காவின் பேர்போன