பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5. சுரங்கத் தொழில்

திண்பொருள்களில் மக்கள் முதல் முதலில் அறிந்ததும் அறிந்து பயன்படுத்தியதும் பொன்னே என்று கூறியுள்ளோம். திண்பொருள்களை நிலமகளின் கருவினின்று கண்டு வெளிப் படுத்தச் சுரங்கங்கள் முதன் முதலில்

பொன்னுக்காகவேதான்.

தொட்டதும்

எகிப்திய நாட்டில் நான்காம் கால்வழியினர் காலத்திலுள்ள ஓர் ஓவியத்தில் பொன்கழுவும் காட்சி ஒன்று தீட்டப்பெற்றிருக்கிறது. இதுவன்றி எகிப்திய அரசர்கள் போரில் பிடித்த பிறநாட்டுப் படைஞர்களை அடிமைகளாக்கி அவர்கள்மூலம் நிலத்தில் சுரங்கங்களிலிருந்து பொன் வெட்டி எடுத்ததாகவும் அறிகிறோம். இவ்வரசர்கள் காலம் கி.மு. 2,900 ஆகும். (அதாவது இன்றைக்கு 4,000 ஆண்டுகட்குமுன் எனலாம்).

ச்

கி.மு. 1,200-இல் (இற்றைக்கு 3,200 ஆண்டுகட்கு முன்) அர்மீனியா நாட்டிலுள்ள ஒரு சிற்றாற்றின் குறுக்கே கம்பளி நூல்களால் அணை கட்டப்பட்டு அதன் வழியாக நீருட்கரைந்த நுண்மணல் பொடிகள் அரித்தெடுக்கப்பெற்றனவாம். இ செய்தியையே அறிவியல் முன்னேற்றமற்ற அக்காலத்திய கிரேக்கக் கவிஞர் ஜேஸன் பொன் கம்பளி வேட்டையாடிய கதையாகப் புனைந்துரைத்தார். கி.மு.350-ஆம் ஆண்டில் லிடியாவை ஆண்ட கிரீஸஸ் என்பவன் அலெக்சாண்டரால் வெல்லப்பட்டவன். அவன் தன் நாட்டில் சுரங்கங்களிலிருந்து பொன் எடுத்து ஒப்பற்ற பொற்குவை திரட்டிவைத்திருந்ததனாலேயே அன்றை உலகின் மாபெருஞ் செல்வனாக விளங்கினான்.

தமிழ்நாடும் அக்காலத்தில் பொன்னும் மணியும் முத்தும் செழித்த நாடாயிருந்தது. கொற்கையிலிருந்து முத்து எடுக்கப் பெற்றதுபோலவே, பிற இடங்களில் தங்கமும் அக்காலத்தில் மிகுதியாக எடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அப்படியில்லா