பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

அப்பாத்துரையம் - 39

விட்டால் அக்காலத்தில் நாட்டில் இவ்வளவு பொற்குவை இருந்திருக்க முடியாது. வரலாற்றறிஞர்கள், தமிழ்நாட்டிற் பிறநாட்டுக் காசுகள் மிகுதியாகக் காணப்படுவது பிறநாட்டு வாணிபத் தொடர்புகளால் என்பர். ஆனால், இந்நாட்டிலேயே தங்கக் காசுகள் இருந்தது வாணிபத்தின் பயன் என்று கூறமுடியாது.பூண்கள் அணியும் வழக்கமும் உள் நாட்டில் பொன் விளைவில்லாமல் இவ்வளவு வரன்முறை வழக்கமாயிருந்துவிட முடியாது. தமிழ்நாட்டிற்கு வெளியில் உள்ள சுரங்கங்களிலிருந்து பொன் வந்திருக்கலாமோ எனில், அன்று. உள் நாட்டில் விளைவின்றிப் பிறநாட்டிலிருந்து தரப்படும் பொருள்களை அந்நாட்டுடன் தொடர்புபடுத்திக் கூறுவது பண்டைத் தமிழ் நூல்கள் வழக்கம். கலிங்கத்தின் நேரிய ஆடையும், சீனத்தின் பட்டும், சிங்களத்தின் மாணிக்கமும் ஆரியப்படை காவலரும் யவனப் பெண் காவலரும் எடுத்துக் கூறப்படும் நூல்களில் பொன் வெளியிலிருந்தே சிறப்பாக வருவதாயின் அது கூறப்படாதிரா தன்றோ?

மேலும் காவிரிக்குப் பொன்னி என்று பெயர் வந்ததற்கான காரணத்தை மேலே எடுத்துக்காட்டினோம். அந்த ஆற்றின் தலையிடத்தில் கோலாற்றுப் பக்கம் இன்று பல இடங்களில் பொன் எடுக்கப்பட்டபோதிலும் முற்காலங்களில் தொழிலாற்றிய சுரங்கங்களின் பக்கமாகவே மிகுதியான தங்கம் அகப்படுவதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்தும் அக் காலங்களில் பொன் எடுக்கப்பட்டது என்று மட்டுமன்று; சுரங்கங்களும் வெட்டப் பட்டிருந்தன என்று அறியலாகும்.

காவிரியாற்றின் தலைப்பில் மட்டுமன்றி அதன் போக்கிலுங்கூட அக்காலத்தில் தங்கம் எடுக்கப்பட்டிருக்கலாம். சோழநாட்டில் பொன் விளைந்த களத்தூர் என ஓர் ஊரின் பெயர் பழைய நூல்களில் காணப்படுகிறது. அக்காலத்தில் அங்கே தங்கம் சுரங்கத்தினிடமாகவோ, மணலிலிருந்தோ வேறெவ்வகையிலோ கிடைத்திருக்கவேண்டும் என எண்ணலாம்.

அண்மைக் காலங்களில் அருகலாகத் தமிழ்நாட்டின் உள்நாட்டு வெளிநாட்டுப் பொன் தேட்டாளர்கள் உழைத்து வந்துள்ளனர். அவர்களால் இதுவரை பெரும்படியான பொன்விளைவு எங்கும் காணமுடியவில்லை யாயினும், சிறு சிறு