36
அப்பாத்துரையம் - 39
ய
இவ்வகையில் தமிழ் நாட்டின் பழைய நிலைகள் தெரியவராவிடினும் இன்னொரு பழைய நாகரிக நாடு ஆகிய சீன நாட்டின் மக்கள் ஆழ்ந்து சுரங்கம் வெட்டிய வகை தெரியவருகிறது. தாள் செய்தல், அச்சு, வெடி மருந்து ஆகிய புதுவது புனைவுகளைப் பழைய காலத்திலேயே கண்ட இச்சீரிய மக்கள் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே 3000 அடிக்கு மேலும் மூங்கில் குழாய்களால் மண்ணைக்கல்லி உள்ளிடத்தில் பொன் இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் வகையையும், ருந்தால் எடுக்கும் வகையையும் அறிந்திருந்தனராம்.
மணலிலும் மண்ணிலும் பொன்னைத் தேடிய மக்கள் சிறிய மண் வெட்டியால் மண்ணைக் கோரியெடுத்துத் தட்டங்களிலோ பரந்த ஓடுகளிலோ வைத்து நீருடன் கலந்து சுழற்றிச் சுழற்றிக் கொட்டுவர். பொன் எடைமிகுந்த பொருளானபடியால் மண்ணும் மணலும் நீருடன் கலந்து போகும்போதும் அது அடியிற்கிடந்து விடும். பொன்கலந்த மண் பொன் கலவாத மண்ணை விட எடைமிகுந்தே இருக்குமாதலால் அது மண்ணின் ஆழத்தினுள்தான் காணப்படும். இப்படி ஆழமாகத் தோண்டித் தோண்டி யெடுத்து அரித்து மண்ணில் கலந்த பொன் பொடிகளையும் பிற திண் பொடிகளையும் பிரித்தெடுப்பர். அதிலிருந்து பின் பொன்னைப் பிரித்தெடுக்க அக்காலத்துச் சிறந்த முறை புடமிடுவதேயாகும். பொன் கலவையை உருக்கி நீட்டித் தகடாக்கி, அரை அல்லது அரையே அரைக்கால் அங்குல அகலமும் இரண்டு அல்லது இரண்டரை அங்குலம்வரை நீளமும் உள்ள துண்டுகளாக்கி அவற்றைப் புளி நீரால் கழுவுவர். பின் உப்பும் இருப்புக் கந்தகியும் (Iron Sulphate) கலந்த செங்கற்பொடியில் அதனையிட்டுப் புரட்டி இரண்டு ஓட்டுச் சில்லுகளினிடையில் வைத்துக் கீழே வைத்துக் கீழே காற்றுப் காற்றுப் புகும் தொளையுடைய அகன்ற சட்டி அல்லது ஓட்டில் வாட்டியின் கொழுங் கனலினிடையே பல மணி நேரம் வைப்பர். இங்ஙனம் 41 தடவை புடமிட்டால் பொன் கலவை முற்றிலும் மாசுதீர்ந்து பத்தரை மாற்றுத் தங்கம் ஆகுமென்பர்.
பொன் கலவை மிகுதியாயிருக்கும் இடத்தில் மேன் மேலும் வெட்டுவதனால் பொற்குழி வரவர ஆழமாய்க் கிணறு போலாகிச் சிறு சுரங்கமாய்விடுகிறது. அதில் மக்கள் ஏணிவைத்து