பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 39

பாறைகளை உடைப்பதற்கு இது இன்றும் வழங்குகிறது. பண்டைக் காலத்திலும் இது வழங்கி இருக்கலாம். 'கல்லுளிச் சித்தன் போனவழி காடுமேடெல்லாம் தவிடு பொடி' என்ற பழமொழியைப் பார்க்க அக்கல்லுளிச் சித்தர் இவ்வெடி மருந்தின் ஆற்றலைக் கைக்கொண்ட வராயிருந்திருப்பாரோ என்று தோன்றும். சுரங்கத்தொழிலில் இவ்வெடிமருந்தின் பயன் காஞ்ச நஞ்சமன்று. பல நாள் பல மனிதர் முனைந்து குறைபயனுடன் செய்யும் வேலையை அது இமைப் போதில் எளிதில் செய்து கொடுத்தது. மலைகளைக் குடைவதும் பெரும் பாறைகளைப் பிளப்பதும் எளிதாயிற்று. அதன் பிறகே சுரங்கத்தொழில் விரைந்து முன்னேறத் தொடங்கிற்று. மண்ணை அகழ்வதுடன் நில்லாமல் மனிதர் மலைகளை ஊடுருவிப் பக்கவாட்டில் குறுக்காகவும் நெடுந்தொலைவு தாய்ப்பொற் பாறைகளை (Lodes) பின்பற்றிச் செல்லலாயினர்.

மண்ணினுள் செங்குத்தாக அகழ்ந்து செல்வதை விட மலையினுள் பக்கத்தைத் தொளைத்துக் குறுக்காக அகழ்தல் பல வகையில் எளிது. மண்ணினுள் அகழ்வோர் ஊற்றுநீரை இறைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அல்லது நாற்புறமும் ஊற்றுக்கண் கசியாது அடைக்க வேண்டும். ஆனால் மலையினுட் குடைபவர்க்கு ஊற்றின் தொந்தரவு மிகுதியில்லை. ஊற்றுக்கள் ஏற்பட்ட போதும் சமாளிப்பது எளிது. பல இடங்களில் நீரை இறைக்கவே வேண்டி வராதபடி சுரங்கம் சுருங்கை உருவில் வெளிப்புற வாயிலிலிருந்து சற்று உயர்ந்து சாய்வாகத் தோண்டப் பெற்று நீர் எளிதில் வெளியோடும்படி அமைக்கப் பெற்றிருக்கும். நீண்ட சுருங்கைகளில் வெளிச்சமும் காற்றும் குறைவு. இவற்றிற்காகப் பக்கத்துக்குப் பக்கம் இரண்டு சுருங்கை வழிகளை இடை வழிகளால் இணைப்பதும், கூடுமான இடங்களில் மேல் முகட்டைத் தொளைப்பதும் உண்டு. அப்படியும் காற்று வராவிட்டால் ஒரு கடைவாயில் நெருப்பிட்டுக் காற்றைச் சூட்டினால் மேலெழ இயக்கிக் காற்றியக்கம் உண்டு பண்ணுவர். குன்றைக் குடைவதில் இன்னும் ஒரு வாய்ப்பு உண்டு.குடைவின் பக்கங்கள் பெரும்பாலும் கல்லாதலால் வேறு அணைப்பு

ல்லாமலேயே அவை உறுதியாக நிற்கும். மண்ணுக்குள் அகழும்போது நாற்புறமும் வலிமையான சுவர்கள் எழுப்ப வேண்டும். மண்ணினுள் பக்கம் நோக்கிச் சுருங்கைகள் வெட்டும்