பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

39

போது மேல் முகட்டைத் தாங்கவும் தூண்ங்கள் ஆங்காங்கு அமைத்தல் வேண்டும்.

வெடிமருந்து ஏற்பட்ட பின் பாறைகளைத் தகர்ப்பது மட்டுந்தான் வாய்ப்பதயிற்று. தகர்த்த பொடிகளை மேலெழுப்பு வதிலோ தகர்க்கும் உழைப்பிலோ பொன்னைப்பிரிப்பதிலோ அது உதவுவதில்லை. இவ்வெல்லா வகையிலும் தொழிலுக்கு உதவிய பெரும்படி முன்னேற்றம் நீராவிப் பொறியினால் ஏற்பட்டது. ஆவிப்பொறிகள் ஆழத்திலுள்ள நீரை முன்னிலும் விரைவாக அப்புறப் படுத்தின. பாறைத்துண்டுகள் பெரிய பெரிய அளவில் தகர்க்கப்பட்டு மேலெழுப்பப்பட்டன.ஆவி ஆற்றலால் வேலை செய்த பொறிச் சுத்தியல்கள் கற்களையும் பாறைகளையும் உடைத்து நொறுக்கின. இவை மட்டுமன்றி ஆவியாற்றலால் காற்றோட்டம் வேண்டுமிடத்தில் விசிறிகள் அமைக்கப் பட்டன. இக்காரணங்களால் நூறு இருநூறு அடி ஆழத்துடன் இதுவரை நின்றிருந்த சுரங்கங்கள் துணிந்து 2000, அல்லது 3000 அடி ஆழம் வரை சென்று வேலை செய்தன. இவற்றையெல்லாம்விடப் பாறைகளை உடைக்கும் வகையிலும் நீராவியால் ஒரு பெரிய துணை ஏற்பட்டது. வெடிமருந்து வைக்குமுன் அதற்காகப் பாறைகளில் தொளைகள் செய்து அதில் வெடி மருந்தை வைத்து விட்டுத் தொலைசென்று மருந்தில் தீப்பற்றவைப்பர். இத்தொளைகள் முன்னால் கல் தச்சரது கைக்கருவிகளாலேயே செய்யப்பட வேண்டியிருந்தன. ஆனால் ஆவிப் பொறியால் அழுத்தம் செய்யப்பெற்ற காற்று வைரத்தையும் தொளைக்கும் உரமுடையது. ஆதலால் அங்ஙனம் அழுத்தப்பெற்ற காற்றைக் குழாய் மூலம் சுரங்கத்தினுட் கொணர்ந்து பாறைகளில் தொளைசெய்ய வேண்டுமிடங்களில் அதனைச் செலுத்தினர். இது வெடி மருந்தின் வேலைக்கொத்து விரைவில் தொளை செய்ய உதவிற்று.

கைத்திறனைவிட நீராவித்திறம் எத்தனையோ உயர்வுடைய தாயினும் அதனை வைத்துக் காப்பது ஆணையை வைத்துக் காப்பதுபோல் செலவும் இடைஞ்சலும் அழிவும் நிரம்பியதாகும். நீராவியை வெளியிலிருந்து சுரங்கத்தினுள் நெடுந்தொலை கொண்டுவர மிக நீண்ட குழாய்கள் வேண்டும். அவை வெடித்து விடாதபடி இருக்கக் குழாய்கள் பல அங்குலத் திட்ப