பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

41

மின் வன்மையால் எத்தகைய தட்பநிலை வேண்டுமானாலும் சுரங்கத்தில் ஏற்பாடு செய்தலாகும். இன்றைய கோலாற்றின் அடித்தளத்திலோ ஆப்பிரிக்க இராந்துச் சுரங்கத்தின் உள்ளுலகிலோ புதிதாகச் சென்று பார்வையிடும் ஒருவன் தன்னைச் சுற்றிலும் உள்ள காட்சிகளையும் அகன்ற தெருக்கள் போன்ற சுருங்கை வழிகளையும் பார்த்தால் அது ஒரு நகரம் என்று நினைப்பானேயன்றிச் சுரங்கம் என்று நினைக்கமாட்டான். ஞாயிறும் திங்களும் மீனினமும் கோளும் இல்லாக்குறை ஒன்றே அது நிலப்பரப்பு அன்று என்பதனை அறியத் துணை செய்யும். இத்தகைய கீழுலகைக் கனவிலேனும் சென்று பார்த்துத்தான் நம் நாட்டின் பழங்கதையாளர் மயிலி ராவணன் கதையையும் பிறநாட்டினர் அலாவுதீன் கதையையும் எழுதினார் களோ என்று எண்ணத்தகும்.

சுரங்கங்களில் உடைத்தெடுக்க பெரும்பாறைகளும் துண்டுகளும் பொடியும் சுரங்கவழிகளில் அமைக்கப்பட்ட புகைவண்டிப்பாதை வழியாகத் தொட்டிகளிலேற்றப்பட்டுச் சுரங்கத்தின் அடிப்புறத்திற்குக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு தொட்டியும் வெறுமையாகவே 4 டன் எடையுடையதாய் 7 டன் எடைவரை தாங்கிக் கொள்வதாயிருக்கும். இத்தகைய தொட்டிகள் பலவற்றைச் சேர்த்துப் பல்லாயிர அடி தூக்கி அவற்றை நிலப்பரப்புக்குக் கொண்டுவர மின் ஆற்றலால் இயங்கும் ஓர் இருப்புச்சட்டம் அமைந்துள்ளது. அச்சட்டத்தில் மாட்டப்பட்ட உருக்குக் கம்பிகள் 32 அல்லது 40 டன் எடையுள்ள அச்சட்டத்தைக் கண்மூடித் திறக்குமுன் 8000 அடி உயர்த்திப் பொன் உருக்கும் ஆலையில் கொண்டு சேர்க்கிறது. அங்ஙனம் சேர்க்க மூன்று வினாடிகளே செல்லும்படி அத்தனை விரைவாய் இயங்குவது அச்சட்டம்! ஓர் இமைப்பொழுதிற்குள் (Second) அது 300 அடி உயருந் தன்மையது.

ஆலையிலுள்ள பெரிய அரைக்கும் கருவிகள் இப்பாறை களைப் படிப்படியாக உடைத்து அரைத்துத் தூளாக்கிப் பின் விரைவாக ஊடுகின்ற நீரில் அவற்றை இழுத்துச் செல்கின்றன. வழியில் பாதரசம் பரப்பிய பலகைகள் கிடக்கும். பாதரசம் பொன்னுடன் கலக்கும் நீர்வடிவுடைய திண்பொருள். மணலிலுள்ள பொன் பொடிகளில் ஒரு பகுதி (கிட்டத்தட்ட