பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 39

பத்திலொரு பங்கு) இங்ஙனம் பாதரசத்துடன் சேருகிறது. இக் கலவையைப் பின் தனியாகத் தீயில் காய்ச்சப் பாதரசம் ஆவியாகி மேல்சென்றுவிடத் தங்கம் கீழே தங்கிவிடுகிறது. ஆவியாய்ச் சென்ற பாதரசமும் வீணாவதில்லை. தட்பமிக்க குழாய்களில் சென்று மீண்டும் நீர்மை உருப்பெற்றுப் பாதரசமாகிறது. அதன்பின் மீந்த மணல் மெல்லிய கம்பளி மயிர்த்துண்டுகள் பாவிய பலவகைச் சாய்வான பலகைகளின் வழியே செலுத்தப்படும். நுண்ணிய எடைமிக்க பொன்பொடிகள் மயிர்த்துய்களில் சிக்கித் தங்கிவிடும். துண்டுகளைப் பின் எடுத்து உலர்த்திப் பொடிகளைச் சேர்த்துருக்குவர். இவ்விரு முறையிலும் தப்பிச்செல்லும் கண்ணுக்குத் தெரியாத மிக நுண்ணிய பொடிகளைப் பொன்னுடன் எளிதாகக் கலப்பதும் நீரிலும் எளிதாகக் கரைவதும் ஆகிய (சயனைடு என்ற) பொருளின் கரைசலிலிட்டு வடிப்பர். மணலிலிருந்த பொன் சயனைடுடன் கரைந்து துத்தத் தகடுகளின்மீது செல்லும். தங்கம் துத்தத்தின் கவர்ச்சியுட்பட்டவுடன் ஸயனைடை விட்டுப் பிரிந்து துத்தத்தின் மீது பொடியாகப் படிந்துவிடும். இவ்வகையில் மூன்று முறையாகத் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது.

இப்போதும் பொன் ஓரளவு மாற்றுக்குறைவாகவே இருக்கும். தனித்தும் பிறபொருள்களுடன் கலந்தும் உருக்கப்பட்டு அது மாற்றுயரும். அதன்பின் வேண்டிய உருவுடைய அச்சுச் சட்டத்தில் அதனை வார்த்துக் குளிர்ச்சியடையுமுன் மேல்மாசகலச் சம்மட்டிகளாலடிப்பர். இவ் வார்ப்புக்கள் சில நாடுகளில் உருளையாகவும் சிலநாடுகளில் கம்பிகளாகவும் இருக் கின்றன. உருசியாவில் இவை கருப்புக்கட்டி (பனைவெல்ல) வடிவில் சற்றே குவிந்து பரந்துள்ளன. அவற்றை அகன்றபுறம் கீழாக வைத்தால் எளிதில் எடுக்கமுடியாது. ஒவ்வோர் உருகிய வார்ப்பும் 36 கல் (pound) எடையுடையது. ஆங்கில நாட்டில் இது கம்பியுருளை வடிவாய் அமைந்துள்ளது. ஒவ்வொரு கம்பி யுருளையும் 400 அவுன்சு எடையுள்ளது.இதிலுள்ள தங்கம் 191/2 மாற்று நிலையுடையதானபடியால் இந்த 400 அவுன்சிலும் உண்மையில் 398 அவுன்சுதான் தனித்தங்கம் இருக்கும். மீதியுள்ள 2 அவுன்சு வெள்ளியாகும்.

தங்கத்தில் கலந்த பிற திண்பொருள்களிலிருந்து தங்கத்தைப்