பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

43

பிரித்தெடுக்க அக்காலத்தில் புடமிட்டனர் என்று மேலே று கூறினோம். அதில் செலவும் முயற்சியும் மிகுதி; காலதாமதமும் ஆகும். தற்காலத்தில் புடமிடுவதற்கு மாற்றாகப் பல புதிய முறைகள் ஏற்பட்டுள்ளன. 16-ஆம் நூற்றாண்டில் மக்கள் இவ்வகையில் வெடியுப்பு நீரகத்தை (Nitric acid) வழங்கினர். இந்நீரகம் பொன் நீங்கலாக மற்ற எல்லாத் திண்பொ பொருள் களையும் எரித்து விடவல்லது. 19-ஆம் நூற்றாண்டில் இதே தன்மையுடையதும் ஆனால் இதனினும் மலிவானதுமான கெந்தக நீரகம் (Sulphuric acid) வழங்கப்பெற்றது. 1869-இல் பாசக முறை (Chlorine process) வழக்கிற்கு வந்தது. உருக்கிய தங்கத்தில் பாசகக் கால் (Chlorine gas) ஊதப்பெற அதன் குமிழிகளுடன் கலந்து மற்றப்பொருள்கள் வெளிவந்து பொன் தூய்மை யாகின்றது. இறுதியாக 1902- இல் அமெரிக்காவில் இதனினும் மலிவான மின்வன்மைப் மின்வன்மைப் பிரிவீட்டுமுறை (electrolysis)

கையாளப்பட்டது.

இங்ஙனமாகப் பொன்னும் பொன்தொழிலும் முன்னேற்ற மடைய உதவியது இரும்பும் இரும்பினாலாகிய பொறிகளுமே என்று எண்ணும் போது பொன்மேலா இரும்பு மேலா என்று எண்ணாதிருக்க முடியவில்லை. மனிதரது அறிவியல்பாகிய சிந்தாமணியிற் பட்டு இரும்பு பொன்னையும் பொற்புடைய தாக்கும் உயர் பொன்னாயிற்றுப் போலும்! எப்படியும் தமிழர் அதையும் கரும்பொன் என்றுதானே கூறினர்!