பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. பொன்னின் பரப்பு

தங்கம் ஆரியர் வரவுக்குமுன் நாகரிக உலகெங்கும் பரந்து கிடந்த ஸெமித்திய திராவிட மக்களனைவரிடையேயும் பரவியிருந்தது. சிறப்பாக எகிப்து, அஸிரியா, மினோவா (ஆரிய வரவுக்கு முந்திய சிறிய ஆசியா) எதுருஸ்கா (ஆரிய வரவுக்கு முந்திய இத்தாலியப் பகுதி) ஆகிய இடங்களிலுள்ள மக்கள் பண்டைக் காலந்தொட்டே பொன்னை வழங்கியதுடன், வாணிபத்திலும் என்றும் முதன்மைபெற்று வந்திருக்கின்றனர். ஆரியர் வரவால் அவருட் பல பகுதியினர் தம் பண்பு திரிந்தழிந்து விடினும், தமிழர் இன்றும் அப்பண்பு முற்றிலும் கெடாது வாணிப வாழ்விலும் அழியாது நிற்கின்றனர்.

இப்பண்டைக் கால நாகரிகத்தை அடுத்துக் கிறிஸ்து பிறந்தபின் கிட்டத்தட்ட 15 நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நாகரிகம் இடைக்கால நாகரிகம் எனப்படும். இக்காலத்தில் ஐரோப்பியர் பண்டைய நாகரிகத்தின் நிழலைப் பின்பற்றி அதனைப் பார்த்துப் போலி வாழ்வு வாழ்ந்தனரேயன்றித் தமக்கெனப் புதுவதாக ஒன்றும் புனைந்து கொள்ளவில்லை. அதோடு தம் பண்புமிழந்து முன்னைய நாகரிகங்களின் மாதிரிகளையே பின்பற்றினர். அதற்கு முற்றிலும் இயைபாகவே அவர் பொன் தேட்டத்தில் முனையாது தமக்கு முன் அதனைத் தேடியும் வாணிபமுறையில் சேர்த்தும் திரட்டி வைத்திருந்த சீனம், இந்தியா முதலிய நாடுகளுடன் வாணிபம் செய்து அதனைத் திரட்ட முனைந்தனர்.

16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய மறுமலர்ச்சியியக்கம் அந்நூற்றாண்டில் கவிதையாகவும் வாணிப முயற்சியாகவும் முளைவிட்டு.17-ஆம் நூற்றாண்டில் அரசியல் அறிவியல் விழிப்பாகத் தளிர்த்து 18-ஆம் நூற்றாண்டில் பகுத்தறிவியக்க மாகப் பூத்து 18,19,20-ஆம் நூற்றாண்டுகளில் கவிதையாகவும்,