46
அப்பாத்துரையம் - 39
இன்று உலகில் தங்கம் மிகுதியாக விளைவது தென் ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்வாலிலுள்ள இராந்து என்ற பாறையிலிருந்துதான். இது உலகின் முதல்தரத் தங்க வயலானது 1927 முதல்தான். இதனை முதலில் 1886-இல் ஜார்ஜ் வாக்கர் என்ற ஏழை மனிதர் கண்டுபிடித்தார். இன்று உலகின் தங்கத்தில் ஒரு பாதி அதிலிருந்து கிடைக்கின்றது. இங்ஙனம் பெரிய அளவு இதில் கிடைப்பது, இதிலிருந்து கிடைக்கும் கல்லில் தங்கம் பெரும் பகுதியாக இருப்பதனால் அன்று. பிற இடங்களில் இதனினும் மிகுதியான பங்கு தங்கக் கலப்புள்ள பாறைகள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கே பாறைகள் எடுக்க எடுக்க கிட்டத்தட்ட எல்லையற்ற அளவில் இருப்பதுடன், எல்லா இடத்தும் ஏறக்குறைய ஒரே அளவில் பாறையில் பொன் கலந்து காணப்படுகிறது. இதனால் இச்சுரங்கத்தில் வேலை செய்வதற்கு முன்னதாகவே அதற்கு இவ்வளவு செலவு பிடிக்கும், இவ்வளவு பலன் கிடைக்கும், இவ்வளவு ஆதாயம் என்று கணக்கிட் டறியலாம். எனவே முதலிடுபவர் இதில் துணிந்து முதலிடுவர். இதைப் போன்று பிறநாட்டுச் சுரங்கங்களில் முதலிடார் என்பது தேற்றம்.
உலகின் பல நாடுகளிடையேயும் தங்க விளைவு வகையில் 1940- ஆம் ஆண்டு விளைவின்படி முதல்நிலை திரான்ஸ்வாலுக்கும், அதன்பின் படிப்படியாக கனடா, உருசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவற்றுக்கும் உரியது.
ரண்டாம் உலகப் போரின் காரணமாக இந்தியாவில் பொன் விளைவு குன்றிவரினும், உலகினைப் பொறுத்த வரையில் இருபோர்களையும் சற்றேனும் பொருட்படுத்தாது பொன் ளைவு மிகுந்துகொண்டேதான் வருகிறது. அடுத்தபக்கத்திற் காணும் தங்க விளைவின் அட்டவணை இதனைக் காட்டவல்லது.
அவுன்சு
I. அமெரிக்கா
A. வட அமெரிக்கா 1. ஒன்றிய நாடு
1937
1938 1939
அவுன்சு அவுன்சு
1940
அவுன்சு
நூ ஆ நூ ஆ நூ ஆ நூ ஆ
- 41,17
42,67 46,20 48,63