பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

அப்பாத்துரையம் - 39

யடைந்துள்ளன என்றும், போரின் பின்னென்று மட்டுமின்றி அதற்குமுன்னும்

இந்தியாவின் விளைவு குறைந்து

வந்திருக்கின்றது என்றும் காணலாகும். உலகின் பொன் விளைவில் இந்தியாவின் பங்கு நூற்றுக்கு மூன்றுதானாகிறது. இதுவும் குறைந்து வருகிறது. இச்சிறு பகுதியில் நூற்றுக்கு 95 பகுதி மைசூர்த் தனியரசைச் சார்ந்த கோலாறு தங்கவயலிலும் அதனையண்டிய வயல்களிலும்தான் கிட்டுகின்றது.இக்கோலாற்றுச் சுரங்கப்போக்கில் 9 பாறைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றன. அவற்றுள் தலைமையானவை கோலாறு, மைசூர், ஊர்காம், நந்தி துர்க்கம், பாலகட்டம் முதலியவை. 1940-ஆம் ஆண்டில் இவற்றிலிருந்து வெட்டி எடுத்த மண் பாறைகளின் எடையும் (டன்களில்) அதிலிருந்து கிட்டிய நேரிய தங்கத்தின் எடையும் (அவுன்சில்) கீழ்வரும் அட்டவணையில் தரப்படுகிறது.

நேரிய பொன் அவுன்சு

மண்பாறை

டன்கள்

1. சாம்பியன் பாறை

1,35,470

65,511

2.கோலாறு(மைசூர்)

2,43,648

89,753

3. நந்திதுர்க்கம்

3,40,330

80,342

4.ஊர்காம்

1,59,830

53,827

மொத்தம்

8,79,328

2,89,433

இந்தியாவில் தங்கம் வெட்டி யெடுக்கத் தொடங்கிய ஆண்டாகிய 1880 முதல் 1934 வரையில் பொன்னுக்காக வெட்டி யெடுக்கப்பட்ட பாறைகளின் மொத்தநிறை 260 நூறாயிரம் டன். அதிலிருந்து கிட்டிய தங்கம் 179 நூறாயிரம் அவுன்சு. இதன் மொத்த விலை ரூ.106 கோடியே 2 நூறாயிரம். தங்கமெடுக்கும் வாணிபக் குழாத்தினர் அரசியலாருக்குத் திறையாக இதனின்றும் கொடுத்தது ரூ.31 கோடியே 90 நூறாயிரம் ஆகும். தங்கத்தின் விலை இந்தியாவைப் போல இங்கிலாந்திலும் மாறுதலுடைய தாயினும், இரண்டாம் உலகப்போர் தொடங்கியது முதல் (அதாவது 1939 செப்டம்பர்த் திங்கள் முதல் ஒரு தூய அவுன்சு எடைக்கு 168 ஷில்லிங் (ரூ.126) ஆக வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதன் விலை இன்னும் ஏறியிறங்கிக் கொண்டே இருக்கிறது. பம்பாய்க் கடைத்தெரு விலைப்படி