பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

49

ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு தோலாத் தங்கத்தின் உயர்ந்த விலை இவ்வளவு என்று கீழ் வரும் அட்டவணையில் காணலாம்.

ஒரு தோலா தங்கத்தின் உச்ச விலை (பம்பாய்)

ரூ.

அ.

1938-39

37

10

1939-40

43

8

1940-41

48

00

8

1941-42

58

4

1942-43

72

0

1943-44

67

0

இன்று எல்லா நாடுகளிலும் கையிருப்புத் தங்கத்தின் அளவில் (reserve gold) முதன்மையாக நிற்பது அமெரிக்க ஒன்றிய நாடுகளே.1940-ல் இது 2,199 கோடியே 50 நூறாயிரம் அமெரிக்க வெள்ளி மதிப்புடையது. அதாவது 5,498 கோடியே 75 நூறாயிரம் ரூபாவுக்கு ஒப்பானது. இத்தொகை 1921-இல் அமெரிக்காவிடம் இருந்த கையிருப்புத் தங்கத்தினும் 5 மடங்கு மிகுதியானது.

தங்க விலை ஏற்றத்திற்கொப்ப ரூபாவின் மதிப்பு உயராததன் காரணமாகக் கழிந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளாக இந்தியத் தங்கம் கப்பலேறி அமெரிக்கா சென்றுகொண்டிருக்கிறது. 1933 முதல் 1940 வரை சென்ற தங்கம் 4 கோடி 29 நூறாயிரத்து 18 ஆயிரம் அவுன்சுகள். அவுன்சு 35 அமெரிக்க வெள்ளி அல்லது ரூ. 87 1/2 விலையுடையது. ஆகவே கப்பலேறிய தங்கத்தின் முழு மதிப்பு ரூ.735 கோடியே 31 நூறாயிரத்து 50 ஆயிரம் ஆகும்.

தங்கத்தின் விலைக்கொப்பத் தம் நாட்டுக் காசுகளின் மதிப்பை உயர்த்தியோ தாழ்த்தியோ வைத்துக்கொள்வதனால் மட்டுமே அரசியல் தன்னாண்மையுள்ள நாடுகள் பொருளியல் உலகிலும் வாணிப உலகிலும் தம் உயர்வைப் பேணிக் கொள்கின்றன. இந்தியா இன்னும் அந்நிலையை எட்டவில்லை. தமிழ்நாடோ இந்தியாவிலும் பிற்பட்டுக் கிடக்கின்றது.வாணிப உலகிலும் பொருளியல் உலகிலும் முதன்மை கொண்டிருந்த தமிழ்நாட்டிற்கு இன்று இந்திய வாணிப உலகில் இரண்டாம் படியான இடங்கூடக் கிட்டவில்லை. இன்றேபோல் முயற்சி