பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

அப்பாத்துரையம் - 39

யில்லாமல், நாட்டு முன்னேற்றக் கொள்கையின்றி அவரவர் குறுகிய தன்னலமே பேணும் மனப்பான்மை யிருந்தால், தமிழர்க்கு இன்று மீந்திருக்கும் பழம் பெருமை தானும் போகலாம். தமிழர் தம் இனமும் தம் நாடும் பேணி எழுந்தால், தமிழர் மட்டுமன்று, இந்தியாவும் மேம்பாடடையும் என்பதில் ஐயமில்லை. அதற்கான முதற்படிகளிலொன்று, பொன் முதலிய திண்பொருள்கள் வகையில் கவனம் செலுத்தி அவற்றின் வளத்தையும் அவற்றின் மூலம் நாட்டின் வளத்தையும் பெருக்குவதற்கான திட்டங்கள் வகுப்பதேயாகும்.