அப்பாத்துரையம் - 39
52 கொண்டு செல்லவோ வகையில்லாதிருந்தது. இப்போது இவ்விரண்டு நாடுகளிலும் இவ்வகையில் வான ஊர்திகள் பேருதவி செய்கின்றன.
பல நாடுகளில் தங்கச் சுரங்கங்களுக்கென்றே புகைப் பாதைகளும், கற்பாதைகளும் போடப்படுகின்றன. உலகின் மிகப் பெரும்புகைப் பாதைகளாகிய சைபீரியப் பாதையும், கனேடியப் புகைப்பாதையும் சுரங்கப் பொருள்களைக்கொண்டு செல்லவே ஏற்பட்டன. சுரங்கங்களாலேயே நகரங்கள் ஏற்பட்டு நாடு மதிப்புப் பெறுவதுண்டு. தென் அமெரிக்க நகரங்களுட் பலவும், மைசூரிலுள்ள கோலாறு நகரும் இதற்கு எடுத்துக்
காட்டுக்களாம்.
பொன்னின் எதிர்கால விளைவு, பயன், பரப்பு ஆகியவை பற்றி அறிஞர்கள் பலவாறாக எழுதியுள்ளனர். டாக்டர் ஃப்ரூட் முதலிய பல அறிஞர்கள் ‘பொன்னின் வெளிப்பகட்டும் அதன்மீது மக்கள்கொண்ட மாயப்பற்றுதலுமே அது விலை பெற்றதன் காரணம். இன்று அது செலாவணி இடையீடாக நடைபெறுவதும் உண்மையில் உலகில் பெரும்பான்மையான மக்கள் இப்பகட்டில் நம்புவதனால்தான். மக்களிடை நாகரிகம் மிகுந்து பொன்னின் மாய மருட்கையில் பற்றுதல் குறையக் குறைய அதன் மதிப்பீடும் குறையும். செலாவணியிலும் அதன் பயன் அதன்பின் போய்விடும்' என்கின்றனர்.
இன்னும் சிலர் பொன் இடையீட்டுக்கு அறிகுறி மட்டுமேயானதால் மக்கள் ஒருவரை ஒருவர் நம்பும் படியான நிலைமையோ அல்லது எல்லார் நம்பிக்கையையும் பெற்ற அரசாங்கமோ ஏற்பட்டபின் பொன்னுக்கு வேண்டுதலே இல்லாமல் வெறுங்கணக்கும் ன்றியமையாத டத்து அதனைக் குறித்துள்ள மதிப்பீட்டுத் தாள்களும் இடையீட்டுப் பொருளாய் வழங்கும் என்கின்றனர்.
இவற்றுள் முதற்சொன்ன கருத்தில் ஓரளவு உண்மை உண்டு என்று முன் பிரிவுகளில் கூறியிருக்கிறோம். வரலாற்று முறைப்படி பார்த்தால் பொன் மக்கள் மதிப்பைப் பெற்றது அதன் மாயமருட்கையாலும் வெளிப்பகட்டாலுமே. ஆனால், வரலாற்றில் பற்பல காலநிலைமைகளுக்கும் ஒத்த பல பண்புகள் இதற்கு இருப்பதனாலேதான் அது நீடித்து உலகில் செலாவணிப்