பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொன்னின் தேட்டம்

55

மதிப்பீடும் உண்மையில் தங்கத்தாலேயே அளக்கப்படுவதாத லால் சேமிப்பதால் தங்கத்தின் மதிப்பு மிகவும் கெட்டுப்போகாது. போதாக்குறைக்கு வேறு எப்பொருள் சேமித்தாலும் கெடும். அவற்றைப்பற்றி எல்லாருக்கும் ஒத்தவேண்டுதலும் இராது போகலாம்.இவற்றை நோக்கப் பொன் உண்மையிலேயே ஒப்பற்ற நிலையான செல்வச் சேமிப்பு பொருள் என்று கூறலாம். இதை உணர்ந்துதான் தாள் மதிப்பீடு செய்யும் நாடுகள் அதில் பெரும்பகுதியைத் தங்கமாகச் சேமிக்கின்றன. மேனாடுகளில் இத் தங்கச் சேமிப்பை அரசியலார் அல்லது அரசியலார் நிலையிலுள்ள பொருள் நிலையங்கள் சேமிப்பதனால்தான் தனி மனிதனுக்குச் சேமிக்கும் இன்றியமையாமை இல்லை என்பதைப் பொருளியல் அறிஞர்கள் மறக்கின்றனர்.

பொன்னின் பெருமையை நம்நாட்டு முன்னோர் நன்கறிந்துதான் நாணயங்கள் பெரும்பாலும் பொன்னிலேயே செய்தனர். இந்தியாவில் பொன் நாணயங்கள் கி.மு.700 முதலே அதாவது 2600 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழங்கப்பட்டன என்று வரலாற்றறிஞர்கள் கூறுகிறார்கள். பெரும்படியான உலக வாணிபத்திற்கே இது பெரிதும் பயன்பட்டது. உள்நாட்டு வாணிபத்திற்கு ஒரு சிறிது பிற திண்பொருள் நாணயங்கள் இருந்தன. ஆயினும் அவை சில்லறை வழக்கிற்கான செப்பு நாணயங்களே. பெரும்படி உள்நாட்டு வாணிபம் அந்நாளில் நெல் முதலிய கூலவகைகளை இடையீட்டுப் பொருளாக வழங்கியே நடைபெற்றது; இதனால்தான் பொன்னுக்கடுத்தபடியான வெள்ளி நாணயம் இந்தியாவில் நெடுநாள் இல்லை. முதல் வெள்ளி நாணயம் வழங்கியவர் 17-ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஷெர்ஷாவே. அவரைப் பின்பற்றி அக்பரும் தற்கால ஆங்கில அரசியலாரும் அதனை வழங்கினர்.

பொன்னே பொருளின் சிறப்பான உருவாதலின் அதனை ஈட்டுதலில் தளரா ஊக்கங் காட்டல் வேண்டுமென்று முன்னோர் கூறியுள்ளனர். இங்ஙனம் 'சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல் கடந்தும் பாவித்தும் பாராண்டும் பாட்டிசை டிசைத்தும்.' அலைந்து ஈட்டும் மக்களின் முழுமனத்தையும் முயற்சியையும் கொள்ளை கொண்ட பொன்,மண்ணின் கருவினின்று பலவகைப் பொறிகளாலும் புதுமுறைகளாலும் எடுக்கப்பெற்று மக்கள்