இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56
அப்பாத்துரையம் - 39
வாழ்வென்னும் பரியூர்ந்து நாகரிக உலகமெங்கும் ஓடிச் செல்கின்றது. அதன் ஒழுக்கில்பட்டு ஒரு சிலர் உயர்கின்றனர். பற்பலர் அதன் சுழலுட்பட்டு வருந்திக் கலங்கி அமிழ்கின்றனர். அதன் ஆற்றலினின்றும் விடுபடும் வகையை இதுவரை யாரும் அறிந்திலர்.இயற்கையின் ஆற்றல்களை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பெற்றுவரும் அறிவியல்வன்மை இச் செயற்கை யாற்றலை வெல்லுவதற்கு மாறாக அதன் ஈர்ப்பில் மென்மேலும் ஈடுபடும் வகைளையே கண்டுபிடித்துச் செல்கின்றது. அதனை வெறுத் தொதுக்கிய மனிதரைக் காணவேண்டுமாயின் பழங்கதை களுக்குத்தான் செல்ல வேண்டும்.