க
1. மார்கழி
திருவதிகை என்ற ஊரில் ஞிமிலி என்றொரு வணிகன் இருந்தான். அவனுக்குப் போதிய செல்வம் இருந்தது. அவன் மனைவி ஆதிரை நற்குடி நங்கை. அவள் நல்லழகும் நற்குணமும் வாய்ந்தவளாகவே இருந்தாள். ஆனால் அவர்களுக்கு நெடுநாள் குழந்தை இல்லை. நாளடைவில் இந்தக் குறையும் அவர்களை விட்டு அகலத் தொடங்கிற்று. ஆதிரை கருவுற்றாள். கரு முதிர்ந்து வளர வளர, அவளால் வீட்டு வேலைகளைச் செய்ய முடியவில்லை; தன் அறையிலேயே படுக்கையில் கிடந்து புரண்டாள். ஞிமிலி தன் வெளியூர்ப் பயணங்களை நிறுத்தி அவளுக்கு உதவியாக வீட்டிலேயே தங்கினான்.
சூலுண்டவர்களின் இயல்புக்கேற்ப, ஆதிரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பொருளில் ஆர்வங்கொண்டாள். அவள் கணவனும் தன்னால் இயன்ற மட்டும் அவற்றைத் தருவித்து அவள் அவாக்களை நிறைவேற்றி வந்தான். ஆனால் திடுமென ஒருநாள் அவள் தனக்கு அகத்திக்கீரை வேண்டு மென்றாள். அகத்திக்கீரை தழைக்கும் காலமல்ல அது. அவன் எங்கும் ஆளனுப்பிப் பார்த்தும் அகத்திக்கீரையே அகப்பட வில்லை. இதுகேட்ட ஆதிரை சிரித்தாள். 'அடுத்த தோட்டத்தில் அகத்தி வளர்ந்திருப்பதைப் பார்த்துத்தான் எனக்கு அவா ஏற்பட்டது. அது இவ்வளவுகிடைக்காத அரும்பொருள் என்பது எனக்குத் தெரியாது' என்றாள்.
அவர்கள் வீட்டை அடுத்து ஒரு தோட்டம் உண்டு என்பதே அதுவரை DIலிக்கோ, அந்த ஊராருக்கோ தெரியாது. அத்தோட்டம்,வானளாவிய மதில்கள் சூழ்ந்தது.மதில்களினுள்ளே என்ன இருந்ததென்று எவரும் பார்த்ததில்லை. அதனுள் செல்லும் வாயிலும் ஊர்ப்புறமாய் இல்லாமல் காட்டுப்புறமாய் இருந்தது. ஆகவே அதற்குரியவர் யாரென்பதும் எவருக்கும்