60
அப்பாத்துரையம் - 39
புதைமறைவாகவே அமைந்தது. ஆனால் ஞிமிலியின் வீட்டின்
ள்ளறையில் நெடுங்காலம் அடைத்துக் கிடந்த ஒரு பலகணி இருந்தது. தற்செயலாக ஆதிரை அன்று அதைத் திறக்க நேர்ந்தது. அதன் வழியாகவே அவள் மதிலகமுள்ள தோட்டத்தைக் கண்டாள். நீலநிறக் கடலின் அலைகள்போல அகத்தியின் தளதளப்பான இலைகள் அங்கே ஆடிக்கொண்டிருந்தன. நீல அலைகள்மீது தவழ்ந்தாடும் வெள்ளன்னங்கள் போல அதன் பூக்கள் விளங்கின. அவற்றைப் பார்த்த ஆதிரைக்கு அகத்திக்கீரை மீத அவாவுண்டானதில் வியப்பில்லை.
மனைவியிடமிருந்து தோட்டத்தின் செய்தி கேட்டபின், ஞிமிலியும் பலகணி வழியாகப் பார்த்தான். ஆனால் பலகணியில் ஒரு கைகூட நுழைய முடியாது. மதிலைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான். அதில் ஏற அவன் துணியவில்லை. அதேசமயம் அகத்திக்கீரையின் ஆவல் தணியாமல் நாளுக்கு நாள் ஆதிரையின் உடல் மேன்மேலும் வாடிற்று. இன்னும் வாளா இருந்தால் குழந்தையுடனே தாயும் உலகவாழ்வை நீத்துவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஞிமிலிக்குத் தோற்றிற்று. இந்த உயிராபத்தில் தன் உயிர் கொடுத்தேனும் அகத்திக் கீரை பெற்றுவிடுவது என்று வணிகன் துணிந்தான்.
விடிய ஒரு யாமத்திலேயே அவன் எழுந்து மதில்களில் ஏறினான். மறுபுறம் எவ்வளவோ ஆழமாகத் தோற்றினாலும் துணிந்து குதித்தான். மடிநிறையக் கீரையைப் பறித்துக்கொண்டு விடியுமுன் வெளியேறினான்.
கண்டதனால் ஏற்பட்ட அவா தின்றதனால் சிறிதும் நிறைவு பெறவில்லை. அது பன்மடங்கு மிகுதியாயிற்று. DIலி நாள்தோறும் விடியற்காலம் மதிலேறி உட்சென்று தன்னா லியன்றமட்டும் கீரையை மூடை மூடையாகத் தூக்கி வந்தான். ஆதிரையின் உடல் அகத்திக்கீரை தின்றபின் முற்றிலும் நன்னிலையடைந்து வந்தது. ஆனால் அவள் அவா மட்டும் தீரவில்லை. அதை முற்றிலும் நிறைவேற்றத் தவறினால், எங்கே மீண்டும் பழைய நிலை வந்துவிடுமோ என்று ஞிமிலி அஞ்சினான். எனவே தொடர்ந்து மதிலேறிச் செல்ல வேண்டியதாயிற்று.
தோட்டத்திற்குரியவன் உண்மையில் ஒரு மாயக்காரன். நாள்தோறும் அகத்திக்கீரை குறைவதைக் கவனித்து, அவன்