பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




62

||--

அப்பாத்துரையம் - 39

பிறக்கப் போகும் குழந்தை பற்றிய அச்சம் அவளுக்கு மிகுதியில்லை. இதுவரை காத்த தெய்வம் இனியும் காக்கும் என்று அவள் ஆறுதல்கூட அடைந்தாள்.

ஆதிரைக்கு அழகிய பெண்மகவு ஒன்று பிறந்தது. அதன் அழகும் ஒளியும் தாய்தந்தையர் உள்ளத்தைக் களிக்கச் செய்தன. பிள்ளை பிறந்த நாற்பத்தோராவது நாள் அதற்குப் பெயரீட்டு விழா நடந்தது. உறவினர் ஊரார் அனைவரும் வந்திருந்தனர். அவர்களிடையே மாயக்காரனும் இருந்தது கண்டு ஞிமிலி திடுக்கிட்டான். ஆனால் இதை அவன் மனைவிக்கோ மற்றவர்களுக்கோ கூறி அவர்கள் மகிழ்ச்சியைக் குலைக்கவில்லை. பிள்ளைக்குப் பரிசுகொடுத்தவர்களுள் மாயக்காரனே எல்லார் கவனத்தையுங் கவர்ந்தான். ஏனெனில் அவன் பரிசுகள் பலவாகவும் விலையேறியவையாகவும் இருந்தன. உறவினர் குழந்தைக்குப் பெயரிடும் பொறுப்பை அவனிடமே விட்டனர். அவனும் அதை ஏற்றுப் பிறந்த மாதத்தின் பெயரால் குழந்தையை மார்கழி என்று அழைத்தான்.

சென்றபின், மாயக்காரன்

விருந்தினரனைவரும் வணிகனிடம் வந்து குழந்தையைக் கேட்டான். அப்போது தான் அவனை அடையாளமறிந்த ஆதிரை, அவனிடம் பலவாறு கெஞ்சி மன்றாடினாள். பெரும் பொருள் பெற்றுக் குழந்தையை விட்டுப் போகும்படி வேண்டினாள்; மாயக்காரன் இணங்க வில்லை. அவன் குழந்தையைக் கொண்டு போன அன்றே ஆதிரை அந்த ஏக்கத்தால் மாண்டாள். இரண்டு மூன்று நாட்கள் மனைவியையும் மகவையும் நினைத்துத் துடிதுடித்த வண்ணம் ஞிமிலியும் உயர்நீத்தான். தாய் தந்தையருக்கு நேர்ந்த இப்பழிகளை ஒரு சிறிதும் அறியாதவளாகவே குழந்தை மார்கழி மாயக்காரன் வீட்டில் வளர்ந்தாள்.

6

மாயக்காரன் தன் வாழ்நாளைத் தன் மாயங்களால் எல்லையற்ற காலம் நீட்டிக்கொண்டே வந்திருந்தான். ஒவ்வொரு தலைமுறையிலும் களங்கமற்ற ஒவ்வொரு கன்னியின் வாழ்வைத் தன் வாழ்வுடன் இணைப்பதன் மூலம் அவன் தலைமுறை தோறும் மேன்மேலும் புதுவாழ்வு வாழ்ந்து வந்தான். மார்கழியை வ்வளவு அரும்பாடுபட்டுப் பெற்றது இந்த எண்ணத்துடனேயே. அவள் அழகு செழித்து வளருந்தோறும் இதுவகையில்