மன்பதைக் கதைகள்
63
அவனுக்குப் பெருங்கவலை ஏற்பட்டது. யாராவது அவள் அழகைக் கண்டு நேசித்தாலும், அல்லது அவள் தன்னையன்றி வேறு எவரிடமேனும் பாசம் காட்டினாலும், தான் எதிர்பார்த்த புதுவாழ்வு தனக்குக் கிட்டாமல் போய்விடும் என்று அவன் அஞ்சினான். ஆகவே மார்கழிக்குப் பதினைந்து வயதானதும், அவன் அவளைத் தன் காட்டுத் தோட்டத்தின் நடுவில் இருந்த ரு கோபுரத்தில் சிறை வைத்தான். மாயக்காரனைத் தவிர வேறு எந்த மனிதரையும் காணாமல், காட்டில் வளரும் மல்லிகை போல அவள் வளர்ந்தாள்.
கோபுரம் எவரும் ஏறமுடியாத அளவு உயரமாய் இருந்தது. அத்துடன் அதில் ஏறிச் செல்லப் படிகளோ ஏணியோ எதுவும் கிடையாது. அதற்கு வாயிலும் ஒன்றே ஒன்றுதான். அந்த ஒன்றும் கோபுர உச்சியிலிருந்த ஒரு பலகணியே. மாயக்காரன் அதில் ஏறிச் செல்லத் தனக்கென ஒரு புது வகை முறையையும் பின்பற்றினான். கீழே நின்று அவன் 'மார்கழி, மார்கழி! உன் கூந்தலைப் பலகணியில் ஒரு சுற்றுச் சுற்றிக் கீழே விரி' என்பான். அது நீலநிறப் பாம்பு போலச் சுருண்டு சுருண்டு கோபுரத்தின் அடித்தளம் வரை வந்து விழும். அதைப் பற்றிக் கொண்டே அவன் உள்ளே செல்வான். மார்கழியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, மீட்டும் இம்முறையிலேயே இறங்கிச் சென்று வந்தான்.
மாயக்காரனின்
வஞ்சக எண்ணங்கள் ஒன்றும் மார்கழிக்குத் தெரியாது. தன் தாய் தந்தையரைப் பற்றியோ, அவன் கொடுமைக்கு ஆளாகி அவர்கள் மாண்டது பற்றியோ கூட அவள் எதுவும் அறிந்ததில்லை. வேறு மனிதர் எவரையும் காணாதலால் அவள் எதுபற்றியுமே கவலையில்லாமல், கூட்டில் பிறந்து கூட்டிலேயே மடியும் வளர்ப்புப் பறவை போல வாழ்ந்தாள்.
தற்செயலான நிகழ்ச்சி ஒன்று குறுக்கிட்டிராவிட்டால் மாயக்காரனின் புதுவாழ்வு என்ற சிறையிலிருந்து விடுபட்டு அவள் தனக்குரிய புது வாழ்வை அடைந்தே இருக்க முடியாது.
ருவதிகையடுத்த சேந்தமங்கலம் சேந்தமங்கலம் என்ற நகரில் சோவரையன் என்ற மன்னன் ஆண்டிருந்தான். பகைவர்களால் அவன் நாடு கைப்பற்றறப்பட்டது. அவனும் போரில் மாண்டான். ஆனால் அவன் புதல்வன் மானேந்தி திரும்பவும் நாடு மீட்கும்