மன்பதைக் கதைகள்
65
ஒருசில நாட்களுக்குள் இளவரசனுக்கும் மார்கழிக்கும் எவர் பிரித்தாலும் பிரியமுடியாத நெருக்கமான நட்பும் பாசமும் ஏற்பட்டு விட்டன. ஒவ்வொரு நாளும் அவன் வரவை எதிர் பார்த்து எதிர்பார்த்து அவள் உறக்கமற்றவளாகக் காத்திருந்தாள். அதேசமயம் எப்போது விடியும் எப்போது விடியும் என்று அதே தோட்டத்திலேயே இளவரசன் காத்திருந்தான்.
'இரவெல்லாம்
தோட்டத்திலேயே
உனக்காகக் காத்திருக்கிறேன்' என்று ஒரு நாள் இளவரசன் மார்கழியிடம் னான். அது கேட்டு அவள் சிரித்தாள். 'நான்தான் உலகமறியாத பேதை. நாடாளப் போகிறவர் கூட ஏன் இப்படி மதியிழந்து விட்டீர்கள்' என்று அவள் கேட்டாள்.
அப்போதுதான் இளவரசனுக்குத் தன் மடமை தெரியவந்தது. இரவில் இங்கே மார்கழியும், தானும் தனித்தனி காத்திருக்கத் தேவையில்லையென்று கண்டான். அதுமுதல் மாயக்காரன் இறங்கிச்சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் இளவரசன் கோபுரமேறினான். இரவெல்லாம் இளவரசியுடன் இனிப்பாகப் பேசிப்பொழுது போக்கிவிட்டு, பகலில் சிறிது உறங்கியபின் வெளிவந்தான். மாலை நேரங்களில் தன் அரச காரியங்களைக் கவனிப்பான். இப்படி அவர்கள் நாட்கள் இன்பமாகக் கழிந்தன.
மாலைதோறும் மாயக்காரன் இளவரசியிடம் வந்து பேசினான். அவள் அழகும் தளதளப்பும் முன்னிலும் பன்மடங்காகப் பெருகியிருப்பதை அவன் கண்டான்.அதேசமயம் தன் உடல் வலிமை மிக வேகமாகக் குறைந்து வந்ததை உணர்ந்து வியப்புற்றான். அவன் மாய ஏற்பாடுகளின்படி அவன் வாழ்வில் இணைக்கப்பட்ட கன்னியின் வளர்ச்சி அவனுக்கு இளமைநலம் அளித்திருக்க வேண்டும். இதை அவன் அறிவான். அது நடைபெறாததன் காரணம் விளங்காமல் அவன் மலைப்புற்றான். ஆகவே மார்கழியின் வாழ்விலே ஏதோ மருமம் புகுந்திருக்கக் கூடும் என்று அவன் ஊகித்தான். 'வேறு யாராவது வருகிறார்களா?' என்று அவன் கேட்டான்.
ங்கே
மார்கழியின் உடல் நடுக்கம் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. ஆனால் அவள் நாவார எதையும் வெளியிடவில்லை.