பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2. அன்பரசி

களக்காடு என்னும் பழம்பதியில்

பண்பார்ந்த வேளாண்குடி ஒன்று உண்டு. அதன் புகழ்மரபுக்குரிய செல்வங்களாக ஆடலழகன் என்ற நம்பியும் பாடுமாங்குயில் என்ற நங்கையும் வளர்ந்து வந்தனர். சிறு பருவத்திலிருந்தே அண்ணன் தங்கையர் பாசத்துக்கு அவர்கள் சிறந்த எடுத்துக் காட்டுக்களாக விளங்கினர். அதற்கேற்ப இருவரும் ஒரே வணிகக் குடும்பத்தில் வாழ்க்கைத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். ஆடலழகன் வாழ்க்கைத் துணைவியாக அமைந்த வணிக நங்கை பண்பாயிரம் என்பவள். அவள் பாடுமாங்குயிலின் ஆருயிர்ப் பள்ளித் தோழி; அதேசமயம் பண்பாயிரத்தின் அண்ணன் பண்ணன் பாடிலியே பாடுமாங்குயிலை மணம் நேர்ந்தான்.

பண்பாயிரத்துக்கு அருண்மொழி என்ற புதல்வனும், பாடுமாங்குயிலுக்கு அன்பரசி என்ற புதல்வியும் பிறந்தனர். இரு குழந்தைகளும் தொட்டிலில் தவழும் பருவத்திலேயே இருதிறத்துப் பெற்றோர்களும் அவர்கள் வருங்கால வாழ்வுகளை ணைய விடுவதென்று ஆர்வக் கனவு கண்டனர். அத்துடன் அருண்மொழி குழந்தைப் பருவம் கடக்கும் முன்பே பண்பாயிரம் உலக வாழ்வு துறக்க நேர்ந்தது. தாயற்ற அண்ணன் பிள்ளையைப் பாடுமாங்குயில் தன் குழந்தையுடன் படிக்க வைத்துத் தானே பேணி வளர்த்தாள். அச்சிறுவர் விளையாட்டுத் தோழமையில் தன் அண்ணனும் தானும் கொண்ட ஆர்வக் கனவின் நிழல் கண்டு, அண்ணியின் பிரிவை அவள் ஒருவாறு ஆற்றியிருந்தாள்.

இரு குடும்பங்களுக்கிடையேயும் நிலவிய இந்த இனிய பாசத் தொடர்பு இப்படியே நீடிக்கவில்லை. மனைவி இறந்த பின் ஆடலழகன் வாழ்க்கையில் கசப்புற்றுக் குடும்பக் காரியங்களில் கவனம் செலுத்தாது ஒதுங்கினான். இதனால் அவன் செல்வம் கரைந்து வறுமைக்கு ஆட்பட்டான். அதேசமயம் பண்ணன்