72
அப்பாத்துரையம் - 39
பாடிலியின் செல்வநிலை நாளுக்குநாள் உயர்வுற்றது. இவ் வகையில் அவன் பெரியப்பன் மகனான பண்ணன் சேந்தன் அவனுக்குப் பெரிதும் உதவினான். பண்ணன் சேந்தன் தையல்நாயகம் என்ற உயர்குடிச் செல்வ நங்கையை மணந்தவன். அவளுடனே வாரியூர் என்ற நகரில் அவள் தந்தை இல்லத்திலேயே செல்வாக்குடன் வாழ்ந்தவன். பண்ணன் பாடிலி அவர்கள் இருவருக்கும் நல்லவனாக நயந்து நடந்ததால் அவர்கள் அவனை வாரியூருக்கே அழைத்து, அங்கே புதிய தொழிலகமும் செல்வமும் செல்வாக்கும் பெறும்படி ஏற்பாடு செய்தனர். இப்புதுத் தொடர்பு ஆடலழகன் வறுமையிலிருந்து பண்ணன் பாடிலியைத் தொலைவாக்கிற்று. குழந்தை அருண்மொழி மீண்டும் தந்தையிடமே சென்று வாழ நேர்ந்தது.
ஆண்டுகள் சென்றன. அருண்மொழி இளமைப் பருவத்தின் வாயிலைச் சென்று எட்டியிருந்தான். ஆனால் அதற்குள் ஆடலழகன் செல்வ நிலையைப் போலவே உடல் நிலையும் தோய்வுற்றுத் தன் இறுதிப் படுக்கையில் சாய்ந்தான். இறுதி மூச்சுவரை அவன் மைந்தனிடம் தன் தங்கையைப் பற்றியே பேசினான்.
"நீ தாயற்ற பிள்ளைாய்விட்ட சமயத்தில் உன் அத்தைதான் உன்னைத் தாயாக வளர்த்தாள். இனி உனக்கு அவளே தாயாகவும் தந்தையாகவும் விளங்குவாள். அத்துடன் நீ குழந்தையாய் இருக்கும்போதே உன் மாண்ட தாயார் சான்றாக நாங்கள் இருவரும் உன்னை அன்பரசிக்கு உரியவனாக்கியிருக்கிறோம். அந்த எண்ணத்திலேதான் உன்னை நான் வளர்த்திருக்கிறேன். அதே எண்ணத்துடன்தான் உன் அத்தையும் அன்பரசியை வளர்த்து வருகிறாள். ஆகவே, நீ அத்தை வீடு சென்று இரு குடும்பத்துக்குமுரிய கடமைகளையும் ஆற்றி அத்தை மாமன் மனம் மகிழ வாழ்வாயாக.”
ரு
இந்த அறிவுரையுடன் ஆடலழகன் இயற்கையின் மடியில் தலைசாய்த்தான்.
அருண்மொழி தாயுடன் தந்தையும் இழந்து தன்னந் தனியனாய் மறுகினான். பின் தந்தை கடைசி அறிவுரையைக் கடைப்பிடித்து வாரியூருக்குப் புறப்பட்டு, மாமன் கடை
ருக்குமிடம் கேட்டறிந்து மாமனை நேரில் சென்று கண்டான்.