பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

73

பண்ணன் பாடிலி எப்போதும் தான் உண்டு தன் தொழில் உண்டு என்று இருப்பவன். குடும்பத்தில் அவன் தலையிடுவ தில்லை. அதேசமயம் குடும்பப் பாசமும் அவனுக்குக் கிடையாது. எனவே அவன் மருமகனை ஆர்வமாக வரவேற்கவில்லை. அத்துடன் அவனை வெறுப்பதாகவும் காட்டிக் கொள்ளவில்லை. எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவனை வீட்டுக்கு இட்டுச் சென்று பாடுமாங்குயிலினிடம் ஒப்படைத்தான். அதோடு தன் கடமை தீர்ந்துவிட்டதாக அவன் கருதினான். ஆனால் பாடு மாங்குயில் அவனைத் தன் அண்ணன் பிள்ளையாகவும் தன் வளர்ப்புக் குழந்தையாகவும் பாராட்டி ஆர்வத்துடன் வரவேற்றாள். தந்தை பிரிவுக்கு ஆறுதல் தேறுதல் கூறிக் கனிவுடன் அவனுக்கு ஆதரவு நல்கினாள்.

அன்பரசியை அவன் சந்தித்தபோது, இருவரும் முதலில்

ஒருவரை ஒருவர் வியப்பார்வத்துடன் நோக்கினர்.

66

""

'ஆ என் பழைய அருள்தானா நீ...ங்கள்? அடையாளம் தெரியாமல் வளர்ந்து விட்டீர்களே' என்று அவள் தொடங்கினாள். “உங்களைக் காண மகிழ்ச்சி” என்று முடித்தாள்.

‘நீ' என்ற பழைய சொற்பழக்கம் நாவில் வந்து, நீங்கள் என்று வலிந்து மாறுவதை அவன் உள்ளூர உவகையுடன் கவனித்தான்.

"ஏன் அன்பு! நீயும்தான் பழைய அன்பாயில்லை, முற்றிலும் மாறிவிட்டிருக்கிறாய். இனி நானும் விளையாட முடியாது. நீயும் விளையாட அழைத்தால் வருபவளாய் இல்லை” என்று தானும் தன் பழைய விளையாட்டுத் தோழமையைச் சுட்டிப் பேசினான் அருண்மொழி.

"அருள் பசியுடனும் அயர்வுடனும் இருக்கிறான், அன்பு! போய் அவனுக்குச் சிற்றுண்டி குடிநீர் கொண்டுவரச் சொல்லு; அப்புறம் பேசலாம்” என்று அவளை ஏவினாள் பாடுமாங்குயில்.

சிறுவர் தோழமை இளமைப் பாசமாக வளர்வதற்கு நெடுநாளாகவில்லை. முதற் சந்திப்பிலேயே அருண்மொழி அன்பரசியை வியப்பார்வத்துடன் கண்ணிமையாது நோக்கி யதையும், அது கண்ட அன்பரசியின் முகம் நாணத்தாலும் உள்ளுவகையாலும் சிவந்ததையும் பாடுமாங்குயில் கூர்ந்து