பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மன்பதைக் கதைகள்

75

அவன் குறிப்பறிந்து அன்பரசி உள் உள்ளூர எல்லையிலா மகிழ்ச்சி கொண்டாள். ஆயினும் தொழிலகத்தில் தந்தை மனம் கோணாமல் நடப்பது அவன் வருங்கால வாழ்வுக்கும் தன் வருங்கால அமைதிக்கும் இன்றியமையாதது என்று அவள் கருதினாள். ஆகவே மெல்ல அவனிடம் தொழிலகம் செல்வது பற்றி வலியுறுத்திப் பேசினாள்.

66

'அன்பரே, உடல்நோய் காரணமாக இரண்டு மூன்று நாட்கள் தொழிலகத்துக்கு நீங்கள் செல்லவில்லை. தொழில் எப்படியிருக்கிறதோ, எப்படி நடக்கிறதோ, பார்க்கவேண்டாமா? இன்றாவது நீங்கள் தொழிலகம் சென்றால்தான் நல்லது என்று து நினைக்கிறேன்” என்றாள் அவள்.

"இன்றே போகவேண்டுமா? எனக்கு உடம்பு இன்னும் முற்றும் குணமாகவில்லை என்று நினைக்கிறேன். நாளை போகிறேனே” என்றான்.

அன்பரசி அவன் கன்னத்தைத் திருகினாள்.

66

“அப்பா கோபிப்பார். உடல் இன்னும் குணமாகாததற்குக் காரணம் எனக்குத் தெரியாததல்ல. அது அவருக்கும் தெரிந்து விடக் கூடாது. அத்துடன் நான் இன்று உங்களுடன் இருக்கப் போவதில்லை. அம்மாவை இனியும் னியும் தனியே தனியே வீட்டு வேலைகளைப் பார்க்கும்படி விடமுடியாது.நான் அம்மாவுடன் சென்று ஒத்தாசை செய்யப்போகிறேன்" என்றாள்.

அவள் தன் குறிப்பறிந்து தன் நன்மைக்காகவே கண்டிப்பாய் இருப்பது கண்டு அவன் ஆண்மை கிளர்ந்தெழுந்தது.“என்னை மன்னிக்க வேண்டும் அன்பு! உன் நேசம் விலையற்றது, அதற்கு நான் இனித் தகுதியுடையவனாயிருப்பேன்!" என்று கூறி எழுந்தான்.

அவள் அவன் கையை ஆர்வத்துடன் அழுத்தினாள். "மன்னிக்கப்பட வேண்டியவள் நான்தான். நீங்கள் அல்ல. உங்களை என் கண்பார்வையிலேயே வைத்துக்கொள்ள முடியுமானால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி தருவது எதுவும் இல்லை. அத்துடன் உண்மையிலேயே உங்கள் உடல் இன்னும் முற்றிலும் குணமடைந்து விடவில்லை. நேரமும் மந்தாப்பா யிருக்கிறது. ஆகவே போகும்போது குடையும் போர்வையும்