பக்கம்:அப்பாத்துரையம் 39.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




78

அப்பாத்துரையம் - 39

மைத்துனருக்கும் அவன் தங்கை பிள்ளைதானே! ஆகவே, நம் தொழிலகம் அவன் தொழிலகம் தானே! மேலும் அன்பரசிக்கு அவனே உரியவனென்று அவன் தாயும் தந்தையும் இருக்கும் போதே நாங்கள் உறுதி செய்து விட்டோம். அதற்கு இப்போது யாரும் வருந்தத் தேவையில்லை. அவனைவிட நல்ல கணவனை நம் அன்பரசிக்கு எங்கே பார்க்க முடியும்?” என்றாள்.

தாய் தன் அன்பன் பேச்செடுத்ததும் அன்பரசி நாணத்தால் முகம் சிவந்து தன் அறை சென்றாள்.

பண்ணன் சேந்தன் பாடுமாங்குயிலின் உரைகேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான்.

“இரக்கச் சிந்தை இந்த அளவுக்குப் போய்விட்டதா? உதவி யற்றவர்களுக்கெல்லாம் இப்படிக் கொடுக்க உங்களுக்கு இந்த உலகமுழுதும் இருந்தால்கூடப் போதாதம்மா” என்றான்.

பாடுமாங்குயில் இந்த அவமதிப்புரை தாங்காது சீற்றம் கொண்டாள். ஆயினும் தன் கணவனுக்கு அவர்கள் காட் ட்டியிருந்த ஆதரவை எண்ணிச் சீற்றத்தை அடக்கிக் கொண்டாள்.

அப்படியும் அவள்

விடையளித்தாள்.

இறுமாப்புடன்

நிமிர்ந்து

"மனிதர் விலை அவர்கள் பணத்திலில்லை, அம்மணி! பணமில்லாதவர் பணக்காரக் குடும்பத்தில் மணம் செய்து உயர்வு பெறுவதும் உலகில் நடக்காததல்ல. அப்படி இருக்க என் அண்ணன் பிள்ளையை, அதுவும் அவர் தங்கை பிள்ளையை, துணையற்றவனாக எப்படிக் கருதிவிட முடியும்?' என்றாள்.

தையல்நாயகி கணவனைக் கடிந்துகொண்டு நேச பாவனையுடன் பேச்சை மாற்றினாள். ஆயினும் கூடுமான போதெல்லாம் பாடுமாங்குயிலிடமும் பண்ணன் பாடிலியிடமும் தம் திட்டத்தை மெல்லக் கூறத் தயங்கவில்லை.

“அன்பரசி உனக்குமட்டும் புதல்வியல்ல பாடு! அவளை நான் என் ஒரே பிள்ளையாகக் கருதுகிறேன். அவள் நகரவைத் துணைத் தலைவர் புதல்வன் பூணாரத்தைப் பொன்னாரமாக அணியும் நாளை எண்ணி எண்ணித்தான் நான் மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். அதற்காகவே உன் அத்தானிடம் நச்சரித்து