பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

77

ஆரியரின் இரண்டாம் தாயகமான ஆரிய நாட்டை விட்டு நீங்கிச் சிந்துவெளித் திராவிட நாகரிகத்தை அழித்த ஆரியர் அங்கே மூன்றாவது தாயகம் அமைத்து, அதை ஆரிய பூமி, புண்ணிய பூமி, பிரமதேசம் என்று அழைத்தனர். இக்காலத்தின் புண்ணிய ஆறு சிந்து, புண்ணிய நகரம் இன்று ஆப்கானிஸ்தான் எல்லையில் பாகிஸ்தானத்தில் இருக்கும் தட்ச சிலை. இக்கால ஆரியக் கலப்பினத்தவரான புதிய சிந்து ஆரியர், கங்கை ஆற்றங்கரையில் வாழ்ந்த திராவிடரையும் ஆரியரையும் மிலேச்சர்,தீண்டப்படாத ஆரியர், திருந்தா மொழியினர் என்று திட்டியுள்ளனர்.

கி. மு. 2ம் நூற்றாண்டில் ஆரியர் கங்கை நாட்டிலும் பரவினர். ஆனால் இங்கே திராவிட நாகரிகத்தையும், மொழியையும் முற்றிலும் அழித்துவிடவில்லை. அது ஆந்திரப் பேரரசர் இமயம் வரை ஆண்டகாலம். கங்கைப் பேரரசர், ஆந்திரப் பேரரசர், குப்தப் பேரரசர் ஆகியோர் உதவியுடன் அவர்கள் கங்கைப் பகுதியை மூன்றாம் ஆரியத் தாயகமாகவும், கங்கை ஆற்றையே புண்ணிய ஆறாகவும், காசியையே புண்ணிய நகரமாகவும், சமஸ்கிருதத்தையே திராவிட - ஆரிய கலப்பு மொழியாகிய புதிய இலக்கிய மொழியாகவும் கொண்டனர். சிந்து ஆற்று நாகரிகம் இப்போது மிலேச்ச ஆரியமாயிற்று. கங்கை நாட்டு ஆரிய திராவிடக் கலப்பு நாகரிகமும் மொழியும் புதிய ஆரிய நாகரிகமாகவும், உலவின.

கி.பி.8-ம் நூற்றாண்டிலிருந்து ஆரியத்துக்குக் கிட்டத்தட்ட நான்காம் தாயகம் என்று கிடைத்தது. இந்தியத் துணைக் கண்டத்தையே ஆட்டிப் படைக்க அவர்களுக்கு உதவிய தாயகம் இதுவே. இது பாலாற்றங்கரையிலுள்ள காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட தமிழகமே! போலி ஆரியத்தை எதிர்த்த திருந்திய ஆரியமான புத்த சமண நெறிகளை ஒழிக்க, போலி ஆரியருக்குப் பல்லவ பாண்டியர் துணை முதலிலும், பின்னால் சோழர் உதவியும் கிடைத்து சங்க இலக்கிய வாழ்வு இதற்குள் தமிழகத்தில் தடம்புரண்டு விட்டதால், சங்க ஏடுகளின் இலக்கியப் பண்பையும் அறிவையும் வடதிசை ஆரிய திராவிடர் கலப்பு மொழியிலும் நாகரிகத்திலும் பூசி, ஆரிய நாகரிகத்திற்கும் புதிய சமஸ்கிருத மொழிக்கும் அறிவு உயர்ந்து கவிழ்க்கும்