78
அப்பாத்துரையம் - 4
வகையே கவர்ந்து ஏய்க்க வல்ல புறப்பண்பும் தோற்றமும் அளிக்க
து உதவிற்று.
வடதிசைத் தாய் மொழிகளில் பழைய வட இந்திய மூல திராவிட மொழிகளின் பண்புகளை இன்னும் காணலாம். அவற் றைக் கசக்கி மேலும் ஆரிய மயமாக்க இன்று சமஸ்கிருதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்தத் தாய் மொழிகளை விடச் சமஸ்கிருத இலக்கியம் தமிழுடன் நெருங்கிய தொடர் புடையது. ஏனெனில் மாண்ட அழிக்கப்பட்ட பழந்திராவிட இலக்கியங்களையும் தமிழ்ச் சங்க இலக்கியத்தையும் மொழி பெயர்த்தும், அவற்றின் சொற்களை ஆரியச் சொற்களுடன் கலந்தும் தம் சூழலுக்கும் அறிவுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்ற நிலையில் அவற்றைக் குழப்பியும் புரட்டியுமே சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் வளர்க்கப்பட்டன.
வட திசைத் தாய்மொழிகள் யாவும் திராவிடக் கலப்புற்ற பண்படா ஆரியக் கலவை மொழிகளே. சமஸ்கிருதம் அப்பண்படா ா மொழிகளில் ஒரு பண்படா மொழி -புத்த சமணர் வழங்கிய பாளி, பிராகிருத மொழிகள் உண்மையில் திராவிடச் சொற்களையும் கருத்துக்களையும் கலந்து அவர்கள் வளர்த்த மொழிகளே. ஆனால் கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் போலி ஆரியர் அதில் மேலும் தமிழிலக்கியப் பண்பேற்றிப் புதிதாக ஆக்கிய புதிய திருந்திய மொழியே (சமஸ்கிருதம் திருந்திய) சமஸ்கிருதம் ஆகும். பாண்டிய பல்லவ சோழர் காலத் தமிழ் ஏடுகள் பலகூட மொழி பெயர்க்கப்பட்டு அண்மைவரை சமஸ்கிருதவாணரால் மூல நூல்களாகப் பரப்பப்பட்டு வந்தன; வருகின்றன.
தமிழ் இவ்வாறு தென்னகத்தின் மூல நாகரிக மொழி, உலக மூலமுதல் நாகரிக மொழி மட்டுமல்ல; சமஸ்கிருதத்துக்கும் அதற்கு மூலத்தாய் மொழிகளான பழைய பாலி, பாகத மொழிகளுக்கும் இலக்கியங்களுக்கும் மூலத்தாய் மொழி - மூலத்தாய் இலக்கியம் ஆகும்.
முரசொலி பொங்கல் மலர் 1959