பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

81

புராண இதிகாசங்களையே வரலாறுகளைவிட உண்மையான மெய் வரலாறுகளாகக் கொள்ளும் மனப்பான்மையாக, மூட நம்பிக்கைகளையும் குருட்டுப் பழக்கங்களையும் தாம் நம்புவதுடன் நில்லாது. தாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பிறர் நம்பும் சூழ்நிலை பெறுவதில் ஆர்வமாக வளர்ந்து வருகிறது.

விலைக்கு வாங்கமுடியாத பொருள், வலியுறுத்திப் பெற முடியாத பொருள், அது கொண்டே அதைத் தாண்டினா லல்லது, பிறிதொன்றினால் தாண்டமுடியாத பொருள் ஆர்வமே. உழைப்பாளர் உழைப்பை விலைக்கு வாங்கலாம். அறிவாளி அறிவைக் கூலி கொடுத்து வாங்கிவிடலாம். முதலாளி மார்களுக்கு ஆதாயத்தினைக் காட்டி இயக்கலாம். ஆனால் ஆர்வம், அவா அவ்வளவு எளிதல்ல. அது உண்ணின்றெழுவது; உண்ணின்றெழுப்பப்படுவது. தீயைப்போல அளவிறந்த பேராற்றல் உடையது. ஆனால் அளந்து பயன்படுத்த வேண்டியது.

தற்காலத் தமிழகத்தின் பெருங்குறை - ஆதாய அர்வம், அடிமை ஆர்வம் தவிர, தமிழ் ஆர்வம் எதுவும் தமிழ் இனத்தில் மிக அரிதாகிவிட்டது.

மக்கள் அறிவும் ஆர்வமும் அறிவியலில் செல்லாதிருப்ப துடன் மட்டுமல்ல, அதற்கு எதிர்த்திசையில் செல்லும்படி தூண்ட இம்மனப்பான்மைகள் காரணமாகின்றன. படித்துப் பட்டம் பெற்ற மாணவர்கூட அதை வெறும் பிழைப்புக்குரிய தொரு நடிப்பாகக் கொண்டு, வாழ்க்கைப்பண்பையும் மனமார்ந்த நம்பிக்கையையும் வாழ்க்கை நோக்கத்தையும் முழுவதும் கோயில், குளம், பழமை, குருட்டு நம்பிக்கை, வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் தமக்கு இவ்வுலகில் தம் பிற்பட்ட கல்லா சமுதாயத்தில் புகழும், மேலுலகில் நிலையான புண்ணியமும் தேடுவதிலேயே செலவிடுகின்றனர்.

இந்த இருண்ட சூழ்நிலைக்குக் காரணம் சில பழைய வைதிகப் பழம் புரோகிதர்கள் என்றால்கூட நிலைமை கவலைக்கிட மானதேயாகும். ஏனென்றால் அரசாங்கம், அறிஞர், கலைஞர் ஆகிய எல்லாரையும் விடப் பாமர மக்களிடம் நெருங்கிய தொடர்பும் அசைக்கமுடியாத செல்வாக்கும் உடையவர்கள் இவர்களே. ஆனால் உண்மையில் அரசியல் நிலையங்கள், வானொலி நிலையம், பத்திரிகைகள், நாட்டின் பல