பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

லக்

83

க்கியங்கள் ஆகியவற்றை விடச் சங்கங் கன்னட தமிழும் சங்க இலக்கியமும் வருங்கால அறிவியல் வளர்ச்சிக்கு இயல்பாக வழி வகுக்கும் உயிர்ப் பண்புகள் மிக்கவை. ஆனால் இவற்றில் கருத்துச் செலுத்தக்கூடக் கீழையுலகின் சமஸ்கிருத ஆர்வம் ஒருபுறமும், முழு உலகின் மேலை நாகரிக ஆர்வமும் தடைகளாக உள்ளன. வருங்காலத் தமிழகத்தின் அறிவு நூல் வளர்ச்சியில் கருத்துடையவர்கள் மட்டுமன்றி, வருங்கால உலகின் அறிவு நூல் வளம் பற்றிக் குறை காண்பவர்கள்கூட இவ்விரு மயக்கமும் தாண்டி இக்கூறுகளில் கருத்துச் செலுத்தக் கடவர்.

-

-

முதலாவதாக, உலகம் தட்டையானது கடல்கள் ஏழு. உலகங்கள் மூன்று அல்லது ஈரேழு உண்டு பாம்புக்குக் கண்கள் தாம் செவி - சிங்கக் குரலைக் கண்டு யானைக் கூட்டம் வெருண் டோடும் சருகாரம் என்ற பறவை வெயிலை உண்டு வாழும் - அன்னம் பால் கலந்த நீரில் பாலையுண்டு தண்ணீரை நீக்கி வைத்து விடும். இவைபோன்ற எண்ணற்ற கருத்துக்களை நம்பிக்கையாக அல்ல. பொது அறிவாக, விஞ்ஞான நுட்பங்களாக

ன்றைய உலகின் எல்லா மொழி இலக்கியங்களிலும் பின்னாளைய தமிழிலக்கியத்திலும்கூடக் காணலாம். சங்க இலக்கியத்திலோ தொல்காப்பியத்திலோ திருக்குறளிலோ இவற்றைச் சல்லடை போட்டரித்தாலும் காண முடியாது. சில சமயம் நம்பிக்கை மரபுகள் குறிக்கப்பட்ட இடங்களில்கூட சமயமொழி மரபாக அன்றி ஆசிரியர் அறிந்து பரப்ப விரும்பும் மெய்ம்மையாக, அறிந்து நம்பிக் கூறும் உண்மையாக எங்கும் தரப்படவில்லை.

-

இதுமட்டுமன்றி, மேலை இலக்கியத்தில் மிக அன்மை காலத்தில் கூட டெனிசன், வெல்ஸ் முதலிய ஒரு சில கலைஞரிடமே காணத் தக்க நிலையில் உள்ள அறிவார்ந்த இலக்கியக் கருத்துக்களை அறிவியல் நூலாராய்ச்சிப் பண்புடைய அணி மரபுகள் சங்க இலக்கியங்களில் பக்கந்தோறும் பாத்தோறும் காணாலம். கருதத் தழகும் சொல்லழகும் கருதி இடைக்காலத்திலும் இக்காலத்திலும் நாம் வழங்கும் அடை மொழிகளை எண்ணிக்கொண்டு பார்ப்பதாலேயே கிட்டத்தட்ட அறிவியல் நூற்கள் எழுதுகின்ற எழுத்தர் பாணியில் பொது சிறப்புத் திரிபுப் பண்புகள் வேறுபடுத்திக் காட்டுகின்ற சங்க ஏட்டு அடைமொழிகளின் திட்டத்தை நாம் அடிக்கடி கவனிப்பதில்லை.