88
அப்பாத்துரையம் – 4
ஆனால், அதே சமயம் வளர்ந்து வரும் தேசிய மொழிகளின் தேவை பொன்னான ஆங்கிலக் கல்வியையும் ஒரு பொன் விலங்காக்கியுள்ளது.வறண்ட விடுதலையாசையால் பொன்னை விட்டு விடுவதா; அல்லது பொன்னாசையால் இந்த இனிய அடிமை நிலையை அரவணைத்து மகிழ்வதா என்ற இரண்டக க்கட்டுக்கு அது நம்மை ஆளாக்கியுள்ளது.
நாட்டுமொழிகள் முதல் மொழிகளாக, நாட்டின் ஆட்சி மொழிகளாக வேண்டுமென்ற குரல் வெற்றியடைந்து வருகிறது. ஆனால் ஆங்கில மொழியின் உயிர்த் தேவை இதனால் குறையவில்லை. ஏனெனில் ஆங்கிலம் தாய்மொழிகளைப் பெற்றெடுத்த தாயாக மட்டுமல்ல; பேணி வளர்க்கும் செவிலி யாகவும், கல்வியூட்டும் ஆசானாகவும், உற்றுழி உதவும் துணையுதவித் தோழியாகவும் இன்று விளங்குகிறது.
ஆங்கிலம் இவ்வாறு தாய் மொழி வளர உதவிகள் பல செய்து, இன்னும் உதவி வந்தாலும், தாய் மொழிகள் கல்வியில் இடம் பெற்ற வளரும் முன்பே, அதனுடன் தொடர்பற்ற வேறு காரணங்களால், ஆங்கிலக் கல்வியின் தரம் சீர்கேடடைந்து விட்டது.
நம் தேசக் கல்வித் திட்டத்தில் இன்று இரண்டு பெருந் தேவைகள் உண்டு. ஒன்று அது நாட்டுமொழி அடிப்படை யிலமைந்த தேசியக் கல்வி முறையாக அமையவேண்டும். அப்போது தான் அத்திட்டம் உலகக் கல்வி அமைப்புகளுடன் ஒத்திசைந்து ஒன்றுபட முடியும். அதே சமயம் ஆங்கிலக் கல்வியின் தரம் குறைவதற்கு மாறாக, மேம்பட்டு வளர்ந்தோங்க வேண்டும்.
மேலே நாம் குறிப்பிட்ட இரு திற அமைப்பு மட்டும் தான் இந்த இரண்டு நோக்கங்களையும் ஒருங்கே நிறைவேற்ற முடியும். நடைமுறைக் கல்வித் திட்டத்தில் சிறிது சிறிதாக ஆங்கிலத்தின் இடத்தை நாட்டுமொழிகளே பெறும் காரணத்தால், தேசியக் கல்வித் திட்டம் முழுநிறைவு பெற்று வரும் அதே சமயம் புதிய தேர்வியக்கமாக தனிக்கல்வி நிலையங்களில் தேசியத் திட்டத்துக் கும் நடைமுறைக் கல்விக்கும் பாதகமில்லாமல் முழு நிறை ஆங்கிலக் கல்வி வளர முடியும். இந்த இரண்டாம் துறையில் ஆங்கிலக் கல்வியில் இன்று இருந்துவரும் குறைகள் அகற்றப்பட வழி உண்டு.