பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




94

அப்பாத்துரையம் - 4

இன்று நூற்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் ஆரியநாடுகள் அனைத்தும் ஆயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன்பு கி. மு. 2000க்கு முன், ஒரே ஆரிய மொழி பேசிய, ஒரே ஆரிய இனத்தின் வழி வந்தார்கள்தான்.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யமொழி, இத்தாலி, ஸ்பானிஷ், இலத்தீன், கிரேக்கம், பாரசிகம், சமஸ்கிருதம், இந்தி, வங்காளி, குசராத்தி, மராத்தி, பிகாரி, உருது, பஞ்சாபி, சிந்தி - இவை போன்ற மொழிகள் யாவும் ஒரே மூல உலக ஆரிய மொழியின் கிளைகளே.

இது போலவேதான் -

திராவிட இனமும் ஒரே இனம்.

இது திராவிடர் நெடுநாள் உணர்ந்த செய்தி மட்டுமன்று. திராவிட நாட்டு வரலாறு கூறும் செய்திமட்டுமன்று.

மேலை ஆராய்ச்சி இங்கும் இனமொழி கண்டு, அதை வலியுறுத்தி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய நான்கு முக்கிய மொழியிலும், (அவற்றுடன் துளுவும்) மட்டுமன்று, இந்திய மாநிலத்தில் விந்தியத்தையடுத்தும், கடந்தும் உள்ள வேறு

மொழிகளும் திராவிடமொழிகளே.

இந்த 13க்கு மேற்பட்ட மொழியிலும் ஒரே மூல திராவிட மொழியிலிருந்து கிளைத்த மொழிகள்தான். ஒரு குடும்பம்தான் என்பதை நல்லாயர் கால்டுவெல் பெருமகனார் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகறிய மெய்ப்பித்துக் காட்டியுள்ளார்.

வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை;- அவை

பேருக் கொருநிற மாகும்.

சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ்

சாந்து நிறமொரு குட்டி.

பாம்பு நிறமொரு குட்டி, - வெள்ளைப்