புதியதோர் உலகம் செய்வோம்
பாம்பு நிறமொரு குட்டி,
எந்த நிறமிருந் தாலும் - அவை யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம் சிறி தென்றும் - இஃது ஏற்ற மென்றும் சொல்லாமோ?
95
நான்கு அல்லது ஐந்து மொழிகளையும் நீங்கள் சிறிது படியுங்கள். அவை உண்மையில் ஒரு மொழியே என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு அயல் மொழியை நீங்கள் படிக்க ஆண்டுகள் பல வேண்டி வரலாம். ஆனால் அந்த ஐந்தையும் ஓராண்டுக்குள் நீங்கள் படித்துப் பேசவும் எழுதவும் தேர்ச்சிப் பெற்றுவிடலாம்.
அறப்போர் தரும் பாடங்கள் உங்களை இந்த முயற்சியில் தூண்டி இனப் பிரிவினையிலும் வாழ்விலும் உங்களை வருங்கால இனப் பெருமை நோக்கி மிதக்க விட்டுவிடும் என்பது உறுதி.
மொழி பிரிந்த கதை
-
ஒரு மொழி பழந்தமிழ் அல்லது முத்தமிழ் அல்லது திராவிடம் எப்படி, இப்போது ஐந்து மொழியாய், பல மொழிகள் ஆகப் பிரிந்தது?
ஐந்து மொழிகளும் ஐந்து பரந்த மாநிலங்களில் இன்று பேசப்படுகின்றன.
ஒரு மாநிலத்துக்குள்ளேயே மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபாடுகள் இன்னும் உண்டு. ஆனால் இலக்கியத் தமிழ், இலக்கிய மலையாளம், இலக்கியத் தெலுங்கு, இலக்கியக் கன்னடம் ஆகியவை ஒன்றா யிருப்பதினால் பேச்சு மொழிகள் வேறுபாட்டை நோக்காமல் இவற்றை ஒவ்வொரு தனி மொழிகளாகமட்டும் கொள்ளுகிறோம்.
ஐந்து மொழிகளும் ஒரே இலக்கியம் உடையதாய், ஒரே எழுத்து வடிவம் உடையதாயிருந்த காலம் உண்டு. அப்போதுகூட இன்றிருக்கிற மாவட்ட இடவேறுபாடு மாநிலங்களில் இருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இலக்கியம் ஒன்றானதால், ஐந்து மாநிலத்து மொழியும் ஒரே பெயருடன் ‘தமிழ்' என்றே அழைக்கப்பட்டது என்று அறிகின்றோம்.
று