பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




96

சங்க

அப்பாத்துரையம் - 4

இலக்கியங்கள், தேவாரத் திருவாசகங்கள்,

ஆழ்வார்களின் நாலாயிரப் பிரபந்தங்கள் எழுதப்பட்ட காலத்தில் தென்னாடு முழுவதும் ஒரு மொழிதான் இருந்தது. அது போல வடநாடு முழுவதும் எழுத்து இலக்கிய வடிவில் ஒரு மொழிதான் இருந்தது. இந்திய மாநிலத்தில் இருந்த இந்த இரண்டு மொழிகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவை மட்டுமே.

இந்த இரண்டு மொழியிலும் தென்மொழி வடமொழி என்று அன்று அழைக்கப்பட்டதின் காரணம் இதுவே. இன்று தென்மொழி தென்மொழிகள் ஆகிவிட்டது. வடமொழி வட மொழிகள் ஆகிவிட்டது.

வடநாட்டில் இன்றுவரை

எல்லா மொழிக்கும் கிட்டத்தட்ட ஒரே எழுத்துமுறைதான். ஆனால் தென்னகத்தில் 5 திராவிட மொழிகளில் நான்குக்கும் நால்வேறு எழுத்து முறைகள் உள்ளன.

தெலுங்கில் இன்று நாம் எழுதும் எழுத்துமுறை கி.பி.12-ம் நூற்றாண்டிலிருந்துதான் இலக்கிய வழக்காயிருக்கிறது. அந்நூற்றாண்டில் வாழ்ந்த நன்னயன் என்ற தெலுங்கு கவிஞர்தான் அம்முறையை ஆக்கினான் என்று சிலர் கருதுகின்றனர்.ஆனால் உண்மையில் நன்னயன் அதை இன்றைய வடிவில் திருந்துவதற்கு மட்டுமே காரணமாயிருந்ததாக வேண்டும்.

பழைய தெலுங்கு எழுத்து உண்மையில் இன்றைய கன்னட எழுத்துத்தான். ஆனால் அதில் தமிழுக்குச் சிறப்பெழுத்தாகக் கருதப்படும் ற, ழ இரண்டும் இருந்தன. நன்னயன் காலத்தில் ‘ழ’ கைவிடப்பட்டது. ‘ற' நம் காலத்திலேயே ஆரியப் பற்றாளரான புதிய எழுத்தாளர்களால் கைவிடப்பட்டு வருகிறது.

பழைய தெலுங்கெழுத்தாகிய இந்தக் கன்னட எழுத்து கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் வழக்கிற்கு வந்துள்ளது.

ஒரு மொழியாயிருந்த திராவிடம் இரண்டாகப் பிரிவுற்ற காலம் கி.பி. 9-ம் நூற்றாண்டு என்பதை இந்நிலை காட்டுகிறது. திருவேங்கடம் அல்லது திருப்பதிக்கு வடக்கே வடதிராவிடமும் தெற்கே தென்திராவிடமுமாகத் திராவிடம் பிரிந்த இந்த நிலையை 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரிப்பட்டர்