98
அப்பாத்துரையம் – 4
காலம் இதுவே. புத்த சமணர்கள் கி. மு. 6-ம் நூற்றாண்டிலிருந்து வளர்ந்து பரவியதனாலேயே, வட இந்தியத் திராவிட மொழிகள் மலைப் பகுதிக்குள் நெருக்கித்தள்ளப்பட்டுத் தென் இந்தியத் திராவிட மொழித் தொடர்பிலிருந்து விரிந்தன.
ஆரியர் இந்தியா வருமுன் இந்தியா முழுவதும் தமிழ் ஒரே மொழியாகப்பரவியிருந்தது. ஆரியர் இந்தியாவினுள் புகுந்த காலம் கி.மு. 2500க்கும் இடைப்பட்ட ஆயிரம் ஆண்டுகளாகும்.
கி. மு. 2500க்கு முன் நாகரிக உலகில் ஆரியரோ ஆரிய மொழிகளோ கிடையாது. கி. மு. 2500க்குப் பின்னரே அவர்கள் நாகரிக மனித உலகுக்குள் புகுந்தனர். தென் ஆசியா, நடுநிலக் கடல் சார்ந்த 9 மலை ஆசிய, வட ஆப்பிரிக்க, தென் ஐரோப்பியப் பரப்புகளிலும் மேற்கு ஐரோப்பிய பரப்புகளிலும், வட அமெரிக் காவிலும், கிழக்காசியாவிலும் கடல் வழி பரந்து ஒரே இன உலகமாக, ஒரே மொழி உலகமாக விளங்கியவர்கள் தமிழ் இனத்தவர்.
தமிழ் - திராவிட இனத்தின் இந்த உலகச் சுவடுகள் ஆராய்ச்சி யாளர் பலரால் காட்டப்பட்டுள்ளன என்றாலும், அறிஞர் இன்றளவும் பெரும்பாலும் ஆரியர் இனத்தவராகவே இருப்பதால் இத்துறை ஆராய்ச்சி வளர்க்கப்பெறாமலே இருக்கிறது.
ஐந்து மொழிகளையும் பற்றிய வரலாறு கண்ட நீங்கள், மொழிகளையும் படிக்கத் தொடங்கிவிட்டால், உலகில் திராவிட இனத்தின் சின்னங்களை வருங்காலத்தில் பொறித்து மூவேந்தர் மரபுகாக்கும் வேலையில் நீங்கள் நிமிர்ந்து காலடி எடுத்து வைத்தவர்கள் ஆவீர்கள்.
உங்கள் மொழிப்பாடங்களை "அறப்போர் "இனி இதழ்
தோறும் தரும்.
அறப்போர் பொங்கல்மலர் 1961