பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

105

பொருட்பால் 'அரசியல்' கூறுவது என்பர் மற்றொரு சாரார். பொருள்பற்றி அதாவது பணம்பற்றி வள்ளுவர் மிகுதி பேசவில்லை. 'பொருள் செயல்வகை' என்ற அதிகாரம் ஒன்றுதான் அதுகூறும். சமஸ்கிருதத்தில் பர்த்ருஹரியின் நீதி சதகம் இயற்றப்பட்ட காலத்தில் இக்கருத்துப் பரவியிருத்தல் வேண்டும். அர்த்தம் (பணம்) என்ற சொல்லினிடமாக நீதி (அரசியல்) என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது இதனை எடுத்துக்காட்டும்.

இருபொருளுமே வள்ளுவர் பொருட்பாலுக்கு முற்றிலும்

போதாதவை. 'படைகுடி கூழமைச்சு நட்பரண்' என்ற ஆறு அரசியல் உறுப்புக்களையே வள்ளுவர் கூறுகிறார். சமஸ்கிருத ஏடுகளைப் போல் அரசனை உறுப்புக்களில் வேறாக்காமல் உறுப்புடைய முதலாக்குகிறார். அத்துடன் அமையவில்லை. குடியியல் என்ற ஒரு இயல் இணைத்துள்ளார். தவிர கல்வி பண்புடைமை முதலிய அதிகாரங்கள் உண்மையில் சமஸ்கிருத முறைப்படி அரசியலுக்குப் புறம்பானது உரையாசிரியர்கள் இதற்குக் கூறும் விளக்கங்கள் பொருத்திக் காட்டுவனவே தவிர பொருந்துவனவல்ல.

வள்ளுவர் பொருட்பால், அரசியலைக் குறுகிய பொருளில் கூறுவதன்று. அறத்தோடு கூடிய அரசியல், மக்கள் இன்பத்தைக் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் கூறுவது. ஆகவே தான் அது அரசியல் (Polities) மட்டுமன்றி அதைக் குறிக்கோள் வழி இயக்கும் அரசனைப்பற்றியும் (Slalesmanship) அதனால் பயன்பெறும் குடிமக்களைப் பற்றியும், குடியாட்சியில் அவர்கள் தகுதிபற்றியும், அரசியலின் அடிப்படையான சமுதாய இயல் (Sociology) பற்றியும் இவற்றின் தொடர்புகள் பற்றியும் கூறியுள்ளார்.

வள்ளுவர் குடியாட்சி வடவர்கண்ட முடியாட்சி அரசியலு மல்ல, மேலையுலகம் கண்ட குடியாட்சி (Democracy) யும் அதனை முழு அளவில் குறிக்காது! அது இரண்டும் கடந்த ஒன்று. சமதருமம் பொது உடைமை ஆகிய இக்காலப் புதுக்குறிக் கோள்களையும் உட்கொண்டது. இவற்றையும் தாண்டித் தற்கால நலப்பண்பாட்சியின் (Welfare State) குறிக்கோளை உட்கொண்டது. அது மட்டுமன்று. வடவுலகோ, மேலை யுலகோ சமதரும் உலகோ