108
அப்பாத்துரையம் – 4
இடித்துரைக்கும் உரிமையை அமைச்சனுக்கும், இடித்துரைப் பவரை விரும்பி ஏற்றாளும் கடமையை அரசனுக்கும் வள்ளுவர் வகுத்துள்ளார்.
அரசியலில் குடியாட்சியில் கூட உரிமைகளும் கடமைகளும் வெற்றறவுரையாக அறிவுரையாகக் கூறப்பட்டால் பயனில்லை. அவற்றின் நிறைவேற்றத்துக்கு (Final Sanction) வழிவகை வேண் டும்.
பிளேட்டோவும் ரூசோவும் சென்று முட்டிக்கொண்ட கூறு
இதுவே.
தேர்தல் முறையும் புரட்சி முறையும் மேலை அரசியலார் கண்ட இதற்குரிய விடைகள். ஆனால் தேர்தல் முறை திருவுளச் சீட்டு முறையை விடச் சிறந்ததன்று. அழித்தழித்தாக்கினால் நாளடைவில் நலம் விளையும், மக்கள் பொறுப்புணர்ந்து நல்லாட்சி அமைத்துக்கொள்வர் என்று மேலைக் குடியாட்சி கருதுகிறது.
ஆனால் குடியாட்சி என்றும் அழித்தழித்தாக்கிடும் ஆட்சியே என்று உலகம் கண்டு வருகிறது. குடியாட்சி முறையை எந்த நேரத்திலும் செல்வர், திறனுடையோர், வல்லார் கைப்பற்றி மக்களை அடக்கியோ வசப்படுத்தியோ ஏய்த்து விடமுடியும்.
புரட்சியும் ஒரு அரும்பெரு முறையன்று. பழைய பேயை அரும்பாடுபட்டு ஒழித்தபின் பழைய பேயினும் புதியபேய் கொடிதெனக் கண்டால் மக்கள் யாது செய்வது?
புரட்சியும் அழித்தொழித் தாக்கும் முறையன்றி ஒரு சிறந்த ஆக்கமுறை ஆகாது.
இவ்வுண்மைகளைக் கண்டவர் வள்ளுவர். வல்லோர், பல்லோர், தேர்தல், புரட்சி ஆகியவற்றை அவரும் கருத்தில் கொண்டிருந்தார்.
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்"
என்ற வள்ளுவர் புரட்சி தத்துவம் தேர்தல் முறை கடந்த புரட்சி முறைபற்றிய அவர் எண்ணத்தை நிழலிட்டுக் காட்டும். ஆனால் குடியாட்சி கெட்ட இடத்தில் அதன் அழிவுக்குரிய இயல்பான