110
அப்பாத்துரையம் - 4
இனப்பாசமும் அவன் புகழ் விருப்புடன் போட்டியிடுகின்றன. அவன் தன்னலத்தை இவை தடை செய்கின்றன.
இரண்டாவது அறம் ஆட்சிமுறைமை; இன்பம் ஆட்சி நோக்கம். மேலை அரசியலிலோ வடவர் அரசியலிலோ இதன் நிழற்கோட்டைக் கூடக் காணமுடியாது.
இறுதியாக அரசன் அமைச்சர்களை முழுதும்
தன்மனம்போல ஆக்கியழித்துவிட முடியாது. அமைச்சர்களை அவன் பெரியார் 'அவை' அல்லது ஐம்பெருங்குழு எண்பேராயங்களிலிருந்தே தேர்ந்தெடுக்கிறான். அமைச்சனை அரசன் ஒறுக்க முடியும். ஆனால் பெரியார் அவையின் ஆதரவின்றி அவன் அடுத்த அமைச்சனைத் தேர்ந்தெடுக்க முடியாது.ஆளவும் முடியாது. ஆட்சியில் பெயரளவில் அரசனுக்குள்ள செயலுரிமை இந்தப் பெரியார் ஆதரவின் வலுவன்றி வேறல்ல.
அரசன் அமைச்சனை அமர்த்தலாம், நீக்கலாம், தண்டிக்கலாம். ஆனால் பெரியார் அவையிலிருந்தே தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தப் பெரியாரையோ அவன் அமர்த்த முடியாது. ஆக்க முடியாது. அமைக்க முடியாது.
பெரியாரைத் தேர்ந்தெடுப்பவர்கள் சான்றோர்கள்.
சான்றோர்களைத் தேர்ந்து கூறுபவர்கள் பண்பாளர்.
பண்பாளர்களை வகுத்துரைப்பவர்கள் நற்குடி மக்கள், குடிமையின் பெருமையும் நலனும் உடையவர்கள்.
குடிப்பெருமையைச் சமுதாயம் மட்டுமல்ல, இனமே வகுத்த மைக்கிறது. ஏனெனில் அது குடிமரபாக சமுதாயத்தின் வழிவழித் தேர்வு.
குடிப்பெருமையின் அடிப்படை கற்பு, களவு, வீரம், மானம் ஆகிய தமிழ் ஒழுக்கப் பண்புகள் ஆகும்.
வள்ளுவரின் குடியியல் இங்ஙனம் உலகில் எந்த நீதி நூலிலும், அரசியல் நூலிலும் கூறாத அடிப்படைக் குடியாட்சிப் பண்புகளின் பெருவிளக்கம்.
குடிமை, பண்புடைமை, சான்றாண்மை ஆகியவற்றை மற்ற நீதிநூல்கள் கூறும் திட்ப நுட்ப வரையறைகளற்ற பசப்புரை