பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புதியதோர் உலகம் செய்வோம்

127

ஈரானியர் என்று கூறிக்கொண்டனர். 'ஆரிய' என்ற சொல்லும் ‘ஈரானிய’ என்ற சொல்லும் தொடர்புடைய சொற்கள் என்று மேலை அறிஞர் கருதுகின்றனர்.

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலிய மொழிகள் ஒரே இன மொழிகள் என்று ஆய்ந்து முடிவு செய்து, அதனைக் குறிக்க முதலில் தமிழினம் என்ற பெயரையும் பின்னர் திராவிட இனம் என்ற பெயரையும் கொடுத்தவர்கள் ஐரோப்பிய அறிஞர்களே. அதுபோலவே சமஸ்கிருதம் வடஇந்தியாவிலுள்ள தாய் மொழிகளும், பாரசிக மொழியும், ஐரோப்பாவில் இலத்தினம் கிரேக்கம் முதலிய பண்டை மொழிகள் உட்பட ஆங்கிலம் பிரஞ்சு ஜெர்மன் ரஷ்யன் முதலிய பெரும்பாலான ஐரோப்பிய மொழிகளும் ஒரே இனம் சார்ந்தவை என்பதையும் அம்மேலை அறிஞரே ஆராய்ந்து கண்டு முடிவு செய்துள்ளனர். இப்பேரினத்துக்கு அவர்கள் முதலில் ஆரிய இனம் என்றும், பின்னால் மூல ஆரிய இனம் (Ur Aryan) என்றும், இறுதியாக இந்தோ - ஐரோப்பிய இனம் என்றும் பெயரிட்டழைத்தார்கள்.

-

இந்தோ ஐரோப்பிய இனத்தாருக்கு இப்போது ஆரிய இனம் என்ற பெயரை ஐரோப்பிய அறிஞர் வழங்குவதில்லை. இந்தோ-ஐரோப்பிய இனத்தின் கீழ்திசைக்கிளை அல்லது ஆசியக் கிளைக்கு மட்டும்தான் அப்பெயர் பொருந்தும் என்றும்; முழுப் பேரினத்தைக் குறிக்க அது பொருத்தமற்றதென்றும் அவர்கள் கருதுகின்றார்கள்.

இதற்குக் காரணம்காட்டல் எளிது. பேரினத்தைச் சேர்ந்த மொழிகளில் மிகப் பெரும்பாலானவை ஐரோப்பாவிலேயே உள்ளன. ஆரிய அல்லது ஈரானிய என்ற சொல் அவர்கள் மொழியில் வழங்காத சொல் ஆகும். அதுமட்டுமல்ல, மொழியின் பல அடிப்படைச் சொற்களும் (சமஸ்கிருதம் - பிதா, மாதா தாய் தந்தை; ஆங்கிலம் பாதர் - மதர்; சமஸ்கிருதம் த்வார் - காவு; ஆங்கிலம் டோர்) தெய்வப் பெயர்களும் (சமஸ்கிருதம் த்யௌஸ்பிதர் -இலத்தினம் ஜூபிடர் சமஸ்கிருதம் வருண இலத்தீன் யூசுனஸ்) எல்லா மொழிகளுக்கும் பொதுவாகவே உள்ளன. ஆயினும் இந்தியாவிலும் பாரசிகத்திலும் உள்ள இந்தோ - ஐரோப்பிய இனத்தவர் மட்டுமே தமக்கென வேதங்கள் (சமஸ்கிருதத்தின் வேதம் பாரசிகரின் அவெஸ்தா)

-

-

-