புதியதோர் உலகம் செய்வோம்
133
பல தெய்வ வழிபாடு, மதுபானம், கொலை வேள்வி, சாதி வருண முறை, சடங்காசாரம், பழைய குருட்டு நம்பிக்கைகள் ஆகியவற்றை ஆரியச் சார்பாளர் ஆதரிப்பதையும், மற்றொரு பக்கம் திராவிடக் காப்பாளர் இவற்றை எதிர்ப்பதையும் காண்கிறோம். இந்தத் திராவிட எதிர்ப்பணியின் கருத்துக்களை நமக்கு ஒரே மொத்தமாகத் திருக்குறள் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவில் இந்தத் திராவிட எதிர்ப்பின் ஒரு படியை கி.மு. 6-ம் நூற்றாண்டில் புத்த சமணசமய எதிர்ப்பாகக் காண்கிறோம். இதே திராவிடக் கொள்கை அடிப்படையில் ஆரியர் இந்தியாவுக்கு வருமுன் நடு ஆசியாவிலேயே சரதுட்டிரர் சமயமாகிய ஈரானிய அல்லது பார்சி சமயம் எதிர்ப்பது காண்கிறோம்.சரதுட்டிரர் காலம் கி.மு. 2000க்கும் கி.மு.1200-க்கும் இடைப்பட்டதாகும். திராவிடக் கோட்பாடு அல்லது திருவள்ளுவர் கோட்பாட்டின் மிகப் பல கூறுகளைப் புத்த சமண சமயங்களைப் போலவே இப்பார்ஸி சமயமும் கொண்டு ஆசியச்சார்பான ஆரியத்தை எதிர்ப்பது காண்கிறோம்.
ஆரியம் என்று நாம் கூறும் நாகரிகத்தைத் திருவள்ளுவர் ஒரு நாகரிகமாக அல்லது கொள்கையாக எதிர்க்கவில்லை. தீய பண்புகளாகவே எதிர்க்கிறார். ஆனால் அதை இன்னும் முனைப்பாகப் புத்தரும் சமண முதல்வரான மகாவீரரும் கி.மு. ஏழாம் நூற்றாண்டில் எதிர்க்கின்றனர். கி.மு. 1500க்கு முன் அதையே அவர்களிலும் தீவிரமாக ஜரதுஷ்டிரர் எதிர்ப்பது காண்கிறோம்.அது மட்டுமல்ல முதல் எதிர்ப்பில் இரு சாராரும் தம்மை ஆரியர் என்றே கூறிக் கொண்டாலும் எதிர்ப்புக் கொள்கையுடன் நிற்காமல் இன்னும் ஆழ்ந்து செல்கிறது. ஜரதுஷ்டிரரும் பார்சியரும் ஆரியரும் ஒரு கடவுளை வழிபட்டனர். தவிர, ஜரதுஷ்டிரர் தம் ஒரு கடவுளையும் அவர் சார்பான நல்தெய்வங்களையும் அசுரர் என்றும், எதிரிகளின் தெய்வங்களை பேய்கள்' என்ற பொருளையுடைய 'தேவ' என்ற சொல்லால் அழைத்தனர். இந்திய ஆரியரோ தம் நல்தெய்வங் களைத் தேவர் என்றும், எதிரிகளின் தெய்வங்களை ‘அசுரர்’ என்றும் அழைத்தனர்.
நடு ஆசியாவிலும் ஆரிய நாட்டில் ஆரிய நாட்டவரான தமிழினத்தாரும் வந்தேறிகளான இந்து ஐரோப்பியரும் கலந்தே