பக்கம்:அப்பாத்துரையம் 4.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24. உலகமொழிச் சிக்கல்!

தமிழகத்தின் மொழிப் பிரச்சினை இந்திய அரசியல் பிரச்சினைகளுடன் பின்னிக் கலந்து மிகவும் சிக்கலாகியுள்ளது. ஆனால், அரசியல் பிரச்சனைகளுடன் சேராத நிலையில்கூட, அதன் சிக்கல் குறைந்துவிடாது. ஏனெனில் மற்ற நாடுகளின் மொழிப் பிரச்சினைகளுக்கோ, நாட்டுப் பிரச்சினைகளுக்கோ இல்லாத ஒரு தனித்தன்மை அதற்கு உண்டு. தமிழரின் மொழிப் பிரச்சினையை வெளியுலகத்தார் சரியாக அறிந்து கொள்ளாததில் வியப்பில்லை. ஏனெனில் தமிழரிடையேகூட அது உள்ளார்ந்த உணர்ச்சியுருவிலேயே நிகழ்கிறது. அதனைக் கூறாய்வு செய்து அதன் தன்மையைக் கணித்துணர்பவர் மிகச் சிலரே.

தமிழக மொழிப்பிரச்சினை இன்று தமிழகத்துக்கு மட்டுமேயுரிய பிரச்சினையாகத் தோன்றலாம். ஆனால், அதுவே நாளைய இந்தியாவின் மொழிப் பிரச்சினையாகவும், நாளை மறுநாளைய உலகின் மொழிப் பிரச்சினையாகவும் ஆகத்தக்கது -ஆகத் தொடங்கியுள்ளது. ஏனெனில், அதன் வேர்கள் தமிழக மொழி வரலாற்றிலும் தமிழினப் பரப்பாகிய தென்னக மொழி வரலாற்றிலும் மட்டுமன்றி, இந்தியாவின் மொழி வரலாற்றிலும், உலகின் மொழி வரலாற்றிலுமே நெடுந்தொலை ஊடுருவிச் சென்று பரவியுள்ளவை ஆகும்.

இப்பிரச்சினையின் தன்மையை நாம் ஓர் உருவகத்தால்

விளக்கலாம்.

சிறு குழந்தைகளை நம் தாய்மார் 'இரண்டு கண்ணன் அதோ வருகிறான். விரைவில் சாப்பிட்டுவிடு' என்று அச்சுறுத்துவதைக் கேட்டிருக்கிறோம். குழந்தை எப்படியோ 'இரண்டு கண்ணன் அச்சத்துக்கு உரியவன்' என்று நினைத்து நடுங்கும்.